• வேலூர் மாவட்டத்தில் நவம்பர்-2024 மாதத்திற்கான மனுநீதி நாள் முகாம்.
· வேலூர் மாவட்டத்தில் நவம்பர்-2024 மாதத்திற்கான மனுநீதி நாள் முகாம் வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் வட்டம், வடுகந்தாங்கல் உள்வட்டம், வேலம்பட்டு கிராமத்தில் 13.11.2024 அன்று நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் நவம்பர்-2024 மாதத்திற்கான மனுநீதி நாள் முகாம் கே.வி.குப்பம் வட்டம், வடுகந்தாங்கல் உள்வட்டம், வேலம்பட்டு கிராமம் எல்லம்மாள் லக்சிகான் திருமண மண்டத்தில் 13.11.2024 புதன்கிழமை காலை 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது. இம்முகாம் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து முன்கூட்டியே மனுக்களை பெற்று சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி உரிய முறையில் விசாரணை செய்து அதன் விவரத்தினை மனுதாரர்களுக்கு தெரிவிக்கப்படும். தகுதியுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் அரசின் நலதிட்ட உதவிகள் சென்றடையும் வகையில் மனுநீதி நாள் முகாம் நடத்தப்படுகிறது.
மனுநீதி நாள் முகாம் நடைபெறும் வளாகத்தில் சம்மந்தப்பட்ட துறையின் செயல்பாடுகள் மற்றும் நலத்திட்டங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அரங்குகள் அமைக்கப்படும். எனவே, மனுதாரர்கள் மனுவில் தங்களது தொலைபேசி எண் மற்றும் ஆதார் எண்களை குறிப்பிட்டு உரிய ஆவணங்களுடன் தங்கள் மனுக்களை முன்கூட்டியே கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் மற்றும் வட்டாட்சியரிடம் மனு அளித்து மனுநீதி நாள் முகாமில் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment