• கீ.வ.குப்பம் நலத்திட்ட உதவிகள்.
- கீ.வ.குப்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 568 பயனாளிகளுக்கு ரூ. 3.74 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் - வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர், வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் வழங்கினர்.
வேலூர் மாவட்டம், கீ.வ.குப்பம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்களில் பெறப்பட்ட மனுக்களில் 568 பயனாளிகளுக்கு 3 கோடியே 74 இலட்சத்து 63 ஆயிரத்து 40 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் து.மு.கதிர்ஆனந்த், கொண்டசமுத்திரம் ஆர்.ஜி.டி. திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்.
இதில் வருவாய் துறையின் சார்பில் உட்பிரிவு அல்லாத பட்டா பெயர் மாற்றம் 43 பயனாளிகளுக்கும், உட்பிரிவுடன் கூடிய பட்டா பெயர் மாற்றம் 146 பயனாளிகளுக்கும், இலவச வீட்டு மனைப் பட்டா 62 பயனாளிகளுக்கும், சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் முதியோர் உதவித் தொகை 144 பயனாளிகளுக்கும், இயற்கை மரணம் உதவித் தொகை 21 பயனாளிகளுக்கும், திருமண உதவித் தொகை 2 பயனாளிகளுக்கும், கல்வி உதவித் தொகை 5 பயனாளிகளுக்கும், புதிய குடும்ப அட்டை 96 பயனாளிகளுக்கும் என 519 பயனாளிகளுக்கு ரூ.2,03,48,750/- மதிப்பிலும்,
வேளாண்மை துறையின் சார்பில் மானிய விதை 2 பயனாளிகளுக்கும், விவசாய கருவிகள் 2 பயனாளிகளுக்கும் என மொத்தம் 4 பயனாளிகளுக்கு ரூ. 1,43,820/- மதிப்பிலும், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் சார்பில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் அடையாள அட்டை 33 பயனாளிகளுக்கு ரூ.1,65,00,000/- மதிப்பிலும்,
தோட்டக்கலை மற்றும் தோட்ட பயிர்கள் துறையின் சார்பில் சிப்பம் கட்டும் அறை பணி ஆணை 1 பயனாளிக்கு ரூ.4,00,000/- மதிப்பிலும், தொழிலாளர் நலம் சார்பில் முதியோர் ஓய்வூதியம் 2 பயனாளிகளுக்கு ரூ.24,000/-, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சார்பில் மின் இணைப்பு பெயர் மாற்றம் 4 பயனாளிகளுக்கு ரூ.3,044/- மதிப்பிலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் இலவச தையல் இயந்திரம் 1 பயனாளிக்கு ரூ.5,638/- மதிப்பிலும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் இலவச தையல் இயந்திரம் 4 பயனாளிகளுக்கு ரூ.37,788/- மதிப்பிலும் என மொத்தம் 568 பயனாளிகளுக்கு ரூ.3,74,63,040/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி, வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் திரு. து.மு. கதிர் ஆனந்த் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது
மக்களுடன் முதல்வர் திட்டமானது தமிழ்நாடு முதலமைச்சர்-ன் ஒரு சிறப்பு திட்டமாகும். நம்முடைய மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாமை நீர்வளத்துறை அமைச்சர் காட்பாடி வட்டத்தில் உள்ள சேவூர் கிராமத்தில் தொடங்கி வைத்தார். தொடர்ந்து கீ.வ.குப்பம் மற்றும் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மக்களுடன் முதல்வர் முகாம்கள் நடத்தப்பட்டு முகாம்களில் பெறப்பட்ட மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இம்முகாம்களில் குறிப்பாக வீட்டுமனை பட்டா, பட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை, மின்இணைப்பு பெயர் மாற்றம் என பல்வேறு விண்ணப்பங்கள் பெறப்பட்டு உடனடியாக விசாரணை மேற்கொண்டு அதன் மீது தீர்வு காணப்படுகிறது.
இன்று நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கீ.வ.குப்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 598 பயனாளிகளுக்கு ரூபாய் 3 கோடியே 74 இலட்சத்து 63 ஆயிரத்து 40 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.
வேலூர் மாவட்டத்தில் வீட்டு மனை பட்டா வேண்டி வழங்கியுள்ள விண்ணப்பங்கள் முறையாக பரிசீலினை செய்யப்பட்டு தகுதியுள்ள பயனாளிகள் கண்டறிந்து அவர்களுக்கு வீட்டுமனை பட்ட வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் வித்யா லட்சுமி திட்டத்தின்கீழ் கல்வி கடனாக ரூபாய் 67 கோடி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் கல்வி கடன் அதிக அளவில் வழங்கும் மாவட்டங்களில் ஒன்றாக நமது வேலூர் மாவட்டம் உள்ளது.
பொதுமக்களில் இருந்து பெறப்படும் மனுக்களை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உரிய முறையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கான நல திட்டங்கள் முறையாக வழங்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலுவிஜயன், ஒன்றியக் குழுத் தலைவர்கள் ரவிச்சந்திரன் (கீ.வ.குப்பம்), என்.இ.சத்தியானந்தம் (குடியாத்தம்), மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சீதாராமன், சோபன்பாபு, மீனாம்மாள், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) கலியமூர்த்தி, குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment