• வேலூர் கூட்டுக் குடிநீர் திட்டம் பராமரிப்பு பணிகள்.
· மேட்டூர் தலைமை நீர் ஏற்றும் நிலையம் மற்றும் பொம்மிடி பகுதிகளில் மின்வாரியத்தின் மூலம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 12.11.2024 மற்றும் 13.11.2024 ஆகிய இரண்டு நாட்களுக்கு வேலூர் கூட்டுக் குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் வழங்க இயலாது .
· உள்ளூர் குடிநீர் ஆதாரத்தை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைத்த வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் பராமரிக்கப்பட்டு வரும் வேலூர் மாநகராட்சி, 11 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 944 ஊரகக் குடியிருப்புகளுக்கு காவேரி ஆற்றினை நீர் ஆதாரமாகக் கொண்ட திட்டத்தில் உள்ள மேட்டூர் தலைமை நீர் ஏற்றும் நிலையம் மற்றும் பொம்மிடி பகுதிகளில் மின்வாரியத்தின் மூலம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாலும், வாணியம்பாடியில் உள்ள தரைமட்ட நீர்அழுத்த நீர்த்தேக்க தொட்டி பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் 12.11.2024 ( செவ்வாய்கிழமை) மற்றும் 13.11.2024 (புதன்கிழமை) ஆகிய இரண்டு நாட்களுக்கு வேலூர் கூட்டுக் குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் வழங்க இயலாது.
எனவே வேலூர் மாநகராட்சி , நகராட்சி, பேரூராட்சி, ஊரக வளர்ச்சி துறை தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரியதுடன் இணைந்து வழங்கும் உள்ளூர் குடிநீர் ஆதாரத்தை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment