• அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம்.
· அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடத்தப்பட வேண்டுமென தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளதை தொடர்ந்து, வேலுார் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் 01.11.2024 உள்ளாட்சிகள் தினத்தன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் 23.11.2024 அன்று காலை 11.00 மணிக்கு தவறாமல் கூட்டப்பட வேண்டுமென அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இக்கிராம சபைக்கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய பொருள்கள் விவரம்.,
பொருள் 1 |
: |
கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல் |
பொருள் 2 |
: |
கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களை கௌரவித்தல் |
பொருள் 3 |
: |
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் |
பொருள் 4 |
: |
தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம். |
பொருள் 5 |
: |
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம். |
பொருள் 6 |
: |
ஜல் ஜீவன் இயக்கம் |
பொருள் 7 |
: |
தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் மேம்பாட்டு திட்டம் |
பொருள் 8 |
: |
கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவு |
பொருள் 9 |
: |
கூட்டாண்மை வாழ்வாதாரம் |
பொருள்10 |
: |
இதர பொருட்கள் |
மேற்படி, கிராம சபைக் கூட்டங்களில் அனைத்துத் துறை உயர் அலுவலர்கள் பார்வையாளர்களாக கலந்து கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் உத்திரவிடப்பட்டுள்ளது.
மேலும், கிராம சபைக் கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்க ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள் நியமனம் செய்தும், சிறப்பு மேற்பார்வையாளர்கள் நியமனம் செய்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
Comments
Post a Comment