• வேலூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்.

  • வேலூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் -  மாவட்ட ஆட்சித் தலைவர் பொதுமக்களிடம் 519  கோரிக்கை மனுக்களை பெற்றார்.

                வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, தலைமையில்  நடைபெற்றது.

மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய்த் துறை நிலப்பட்டா, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித் தொகை வேளாண்மைத் துறை, காவல் துறை. ஊரக வளார்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சித் துறை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சர்பாக வீடுகள் வேண்டி, மின்சாரத் துறை சார்பான குறைகள், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை. மருத்துவத் துறை, கிராம பொதுப் பிரச்சனைகள், குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 519 மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடமிருந்து பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இன்று நடைபெற்ற குறைத் தீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் வேலூர் மாவட்டத்தில் 2023-24 ஆம் ஆண்டிற்கு  மாவட்ட அளவில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அதிக அளவில் கடன் வழங்கிய வங்கிகள் மற்றும் வங்கி கிளைகளுக்கு விருது, சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசுத் தொகைகளை வழங்கினார். இதில் இந்தியன் வங்கி காட்பாடி மைக்ரோசேட் (Microsate) கிளைக்கு ரூ.15,000/- பரிசுத் தொகையும், கனரா வங்கி அணைக்கட்டு கிளைக்கு ரூ.10,000/- பரிசுத் தொகையும், கனரா வங்கி கம்மவான்பேட்டை கிளைக்கு ரூ.5,000/- பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் த.மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நீ.செந்தில்குமரன், மகளிர் திட்ட இயக்குநர் உ. நாகராஜன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) கலியமூர்த்தி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) செல்வி உமா, வேலூர் வருவாய் கோட்டாட்சியர் இரா.பாலசுப்பிரமணியன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.