• வேலூர்எம்.எல்.எ. ரூ.15 லட்சம் மதிப்பிலான கிறிஸ்துமஸ் பரிசு பொருட்கள்வழங்கினார்.
· கிறிஸ்தவ மக்கள் கிறிஸ்துமஸ் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ரூ .15 லட்சம் மதிப்பிலான கிறிஸ்துமஸ் பரிசு பொருட்கள் மற்றும் ரொக்கப் பணத்தை வழங்கினார் . வேலூர் மாவட்டம் , வேலூரில் சட்டமன்ற அலுவலகம் அருகில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் தலைமையில் கிறிஸ்துமஸ் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் பரிசு பொருட்கள், அரிசி, நெய் , சமையல் எண்ணெய், பிரியாணி செய்ய ரூ . 200 ரொக்கப்பணம் போன்றவற்றை தனது தொகுதி கிறிஸ்தவ மக்கள் 1,547 பேருக்கு தனது சொந்த பணம் ரூ. 15 லட்சம் மதிப்பில் வழங்கினார். இதில் மேயர் சுஜாதா , முன்னாள் எம்.பி. முகமதுசகி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆண்டுதோறும் இந்த சட்டமன்ற உறுப்பினர் தனது சொந்த பணத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாட இந்து மக்களுக்கும், ரம்ஜானை கொண்டாட இஸ்லாமிய மக்களுக்கும், ...