• வேலூரில் அதிமுக-வினர் தடையை மீறி ஆர்பாட்டம்.
· வேலூரில் அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்தும் பெண்களுக்கு பாதுகாப்பில்லாததால் முதல்வர் பதவி விலக கோரியும் அதிமுக-வினர் தடையை மீறி ஆர்பாட்டம் – போலீசார், அதிமுக-வினரிடையே தள்ளு முள்ளு.
வேலூர், சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்தும், திமுக அரசும், முதல்வரும் பதவி விலக கோரியும், புகார் அளித்த மாணவியின் பெயர் கொண்ட எப்.ஐ.ஆர் வெளியிட்டவர்கள் மீது சட்டபடியான கடுமையான நடவடிக்கையை எடுக்க கோரி தடையை மீறி அதிமுக மாவட்ட செயலாளர் அப்பு தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அதிமுக பொருளாளர் மூர்த்தி மற்றும் சிவாஜி உள்ளிட்ட அதிமுக-வினர் பல்வேறு கோஷங்களை எழுப்பும் முன்னரே காவல் துறையினர் அவர்களை கைது செய்ய முற்பட்டதால், ஒருவர் காவல் துறை வாகனத்தின் சக்கரத்தின் முன் படுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்ய முற்பட்டதால் அதிமுக-வினர், காவல் துறையினரிடையே தள்ளு முள்ளும் வாக்குவாதமும் ஏற்பட்டது. இதன் பின்னர் காவல் துறையினர் அனைவரையும் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
Comments
Post a Comment