• வள்ளலார் நிதியுதவி நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா.
· வள்ளலார் நிதியுதவி நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா . · தலைமை ஆசிரியை ஜெயந்தி பூங்கொடி தேசியக்கொடி ஏற்றி மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். வேலூர் வள்ளலார் நிதியுதவி நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது . விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை ஜெயந்தி பூங்கொடி தலைமை தாங்கி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார் . மேலும் மாறுவேடப்போட்டி , ஓவியப்போட்டி , பாட்டுப்போட்டி , பேச்சுப்போட்டி , கட்டுரைப் போட்டி , கவிதைப் போட்டி ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது . தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது . மேலும் ஜவஹர்லால் நேரு , மகாத்மா காந்தி , நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் , ஜான்சிராணி உள்பட பல்வேறு தலைவர்களின் வேட...