• வி.ஐ.டி. 90-ம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.

·        வி..டி. 90-ம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி;

·        மாணவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காக அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை  ஆரம்பிக்கப்பட்டது

·        வி..டி வேந்தர் ஜி. விசுவநாதன் பேச்சு.

     வேலூர், வி..டி பல்கலைகழகத்தில் 1990-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் கணியம்பாடி அருகே தனியார் விடுதியில் நடந்தது.

     கூட்டத்தை முன்னாள் மாணவர்கள் அஸ்லாம் ஷெரிப், ஸ்ரீகாந்த், உமாசங்கர் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

     இந்தக் கூட்டத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை,  சென்னை, பெங்களூர் உள்பட பல்வேறு நகரங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் 35 மாணவர்கள் வந்து கலந்து கொண்டனர்.

     இதில் சிறப்பு விருந்தினராக வி..டி வேந்தர் ஜி.விசுவநாதன் கலந்து கொண்டார். அப்பொழுது மாணவர்கள் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, வி..டி பல்கலைக்கழகத்தில் நாங்கள் படித்தோம், எங்கள் பிள்ளைகள் படித்தனர், எங்கள் பேரப்பிள்ளைகளும் படிக்க வேண்டும். மாணவர் சேர்க்கையில் வேலூரை சேர்ந்தவர்களுக்கு 5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றனர்.

     வி..டி வேந்தர் ஜி. விசுவநாதன் பேசுகையில்,

     நான் 90-ம் ஆண்டு முன்னாள் மாணவர்களை மறக்க மாட்டேன். உங்கள் பேரப்பிள்ளைகளுக்கும் நான் பல்கலைகழகத்தில் இடம் அளிக்க வேண்டும்.

     முன்னாள் மாணவர்கள் சந்திப்பு என்பது ஒரு மகிழ்ச்சியான சந்திப்பாகும். நாங்கள் 1955-ம் ஆண்டு பள்ளியில் படித்த மாணவர்கள் பேரன், பேத்திகளை எடுத்து விட்டோம். அதில் 15 பேர்தான் இப்பொழுது இருக்கிறோம்.

            விரைவில் 71-ம் ஆண்டு மாணவர் சந்திப்பு கூட்டம் நடைபெற உள்ளது. கல்லூரி வாழ்க்கை என்பது வித்தியாசமானது. நான் ஊரிசு கல்லூரியில் படிக்கும்போது இருந்தவர்களில் 4 பேர்தான் இப்பொழுது உள்ளோம். பள்ளி நண்பர்கள் குடும்பமாக மாறி விடுவார்கள். ஆண்டிற்கு ஒரு முறை நீங்கள் குடும்பத்தினருடன் சந்திக்க வேண்டும். நான் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரை பின்பற்றுகிறேன்.

     உங்களுடைய இளமையின் ரகசியம் என்ன என கேட்கிறீர்கள். பழக்க வழக்கங்கள் தான். காசு செலவு பண்ணி உடம்பை கெடுத்துக் கொள்ளக்கூடாது. இட ஒதுக்கீடு கேட்கிறீர்கள். மாணவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காக அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டது.

     வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 படிப்புடன் கல்வியை நிறுத்தி விடக்கூடாது என்பதற்காக அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை மூலம் 10,500 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கி உள்ளோம். இதற்கு வி..டி பல்கலைகழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாதவர்கள் தங்களுடைய ஒருநாள் ஊதியமாக ரூ.96 லட்சம் வழங்கினர். இவர்களுடன் மற்றவர்கள் கொடுத்த பணத்தையும் சேர்த்து கல்வி உதவித் தொகை வழங்கினோம்.

         கல்விக்கு அரசு செலவு செய்ய வேண்டும். ஆனால் பெற்றோர்கள்தான் பிள்ளைகளை படிக்க வைக்க செலவு செய்கிறார்கள். முதலமைச்சராக எம்.ஜி.ஆர் இருந்தபோது நான் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர். அப்போது வேலூரில் அரசு கல்லூரி வேண்டும் என கேட்டேன். அதற்கு அவர், அரசிடம் போதிய நிதி இல்லை. நீங்கள் தனியார் கல்லூரி ஆரம்பிப்பதாக இருந்தால் அனுமதி தருகிறேன் என்றார். அப்படி வந்ததுதான் வேலூர் தொழில்நுட்பக் கல்லூரி.

            வி..டி. பின்னர் பல்கலைக்கழகமாக மாறியது. 90-ம் ஆண்டு மாணவர்களாகிய நீங்கள் படிக்கும்போது 540 பேர் படித்தனர். இப்போது வேலூர் வளாகத்தில் 44 ஆயிரம் பேர் படிக்கின்றனர். இதில் 4 ஆயிரம் மாணவர்கள் ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவர்கள். வேலூர், சென்னை, அமராவதி, போபால் ஆகிய 4 வளாகங்களில் ஒரு லட்சம் மாணவ, மாணவிகள் 75 நாடுகளில் இருந்து வந்து படிக்கின்றனர். இப்பொழுது நீங்கள் 40 ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்கிறீர்கள். 70 ஆண்டுகளுக்கு பிறகும் நீங்கள் சந்திக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.

     பின்னர் அனைத்து மாணவர்களும் அவருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.