• வள்ளலார் நிதியுதவி நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா.

 

 ·        வள்ளலார் நிதியுதவி நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா. 

·        தலைமை ஆசிரியை ஜெயந்தி பூங்கொடி தேசியக்கொடி ஏற்றி மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.

     வேலூர் வள்ளலார் நிதியுதவி நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

     விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை ஜெயந்தி பூங்கொடி தலைமை தாங்கி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

     மேலும் மாறுவேடப்போட்டி, ஓவியப்போட்டி, பாட்டுப்போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

     தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் ஜவஹர்லால் நேரு, மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஜான்சிராணி உள்பட பல்வேறு தலைவர்களின் வேடங்களை மாணவர்கள் அணிந்து வந்து பார்வையாளர்களை பரவசப்படுத்தினர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.