• வேலூர் GPH மருத்துவமனையில் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்.
· வேலூர் பெண்ட்லேண்ட் மருத்துவமனையில் அருண்குமார்விஜய் ஏற்பாட்டில் முதலமைச்சர் ஜோசப்விஜய் பிறந்த நாள் முன்னிட்டு பிறந்த 12 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் - மாவட்ட செயலாளர் வேல்முருகன் அணிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்-யின் பிறந்த நாள் முன்னிட்டு வேலூர் GPH பெண்ட்லேண்ட் அரசு மருத்துவமனையில் பிறந்த 12 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி மருத்துவமனை வளாகத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு வேலூர் அருண் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் அருண்குமார் விஜய் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் கலந்து கொண்டு பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார்.
நிகழ்ச்சியில் த.வெ.க. நிர்வாகிகள் ஜனனி சதீஷ்குமார், தீபக், சாகர், பிரகாஷ், மாதனூர் அன்பரசு மற்றும் குரும்பேரி ஜெகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment