Posts

• மத்திய அரசின் இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் (PM-YASASVI) தகுதியான மாணவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்து எழுத்துத் தேர்வின் அடிப்படையில் கல்வி உதவித்தொகை பெற்று பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

                 2023-24 நிதியாண்டில் , நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோர் , பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் , சீர்மரபின பழங்குடியினர் (OBC, EBC & DNT) ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த முப்பதாயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழகத்தைச் சார்ந்த 3093 மாணவ / மாணவியர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது . இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் ( மாணவ / மாணவியர்கள் ) பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ .2.50 இலட்சத்துக்குள் இருத்தல் வேண்டும் . https://yet.nta.ac.in என்ற இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில் 9 அல்லது 11 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்க வேண்டும் . 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ .75 ஆயிரம் வரையிலும் , 11   மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ .1.25 லட்சம் வரையிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்ப

• வேலூர் மாவட்டம் அல்லேரி மலை கிராமத்திற்கு சாலை அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல்பாண்டியன் ஆய்வு.

Image
                  வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், பீஞ்சமந்தை ஊராட்சிக்குட்பட்ட அல்லேரி மலை கிராமத்திற்கு சாலை அமைக்கும் பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் பெ . குமாரவேல்பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார் .                 அணைக்கட்டு வட்டம், பீஞ்சமந்தை ஊராட்சிக்குட்பட்ட அல்லேரி மலை கிராமம், அணைக்கட்டு, வரதலாம்பட்டு என்ற இடத்திலிருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் மலை பகுதியில் அமைந்துள்ளது. அல்லேரி மலை கிராமத்தை சுற்றி 14 குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளன. அல்லேரி கிராமத்திற்கு வரதலாம்பட்டிலிருந்து சாலை அமைக்க வனத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறையுடன் இணைந்து நில அளவீடு பணிகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு தோராய திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், சாலை அமைக்க தேவையான இடத்திற்கு வனத்துறையிடமிருந்து அனுமதி பெறுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.                 இந்நிலையில் அல்லேரி மலை கிராமத்திற்கு சாலை அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்   வரதலாம்பட்டு பகுதியில் இருந்து அல்லேரி மலை கிராமம் வரை நடந்து சென்று சாலை மேற்கொள்வது குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.  

• தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அண்ணல் அம்பேத்கர், முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணாக்கர்களுக்கான பேச்சுப்போட்டிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

                தமிழ்நாடு அரசு , தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-22 ஆம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கை அறிவிப்பிற்கிணங்க 2023-24 ஆம் ஆண்டில் அனைத்து மாவட்டங்களிலும் அண்ணல் அம்பேத்கர் , முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ , மாணவியருக்கு தனித்தனியே பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்படும் என்ற அறிவிப்பிற்கிணங்க                    வேலூர் மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 01.08.2023 செவ்வாய்க்கிழமையன்றும் , முத்தமிழறிஞர்   கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 02.08.2023 புதன்கிழமையன்றும் வேலூர் மாவட்டத்தில் செயற்பட்டு வரும் அனைத்து பள்ளிகளில்   பயின்று வரும் மாணாக்கர்களுக்கும் (6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு முடிய ) மற்றும் அனைத்துக் கல்லூரிகளில் பயின்றுவரும் மாணாக்கர்களுக்கும் தனித்தனியே அரசு விதிமுறைகளின்படியும் , சமூக இடைவெளியைப் பின்பற்றியும் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டிகள் வேலூர் , அரசு முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி வளாகக் கூட்ட அரங்கில் நடத்தப்பெறவிருந்தன .  

• வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தொழில்முனைவோரும் தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

                மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் 2021-22 ஆம் ஆண்டிற்கான சட்டமன்றக் கூட்டத்தொடரில் சுற்றுலா வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக 30 முக்கிய திட்டங்களை அறிவித்திருந்தார் . தமிழ்நாடு சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய பல்வேறு சுற்றுலாத்தொழில் முனைவோருக்கு மாநில சுற்றுலா விருதுகளை வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்குவது அத்தகைய முக்கிய அறிவிப்பாகும் . தமிழ்நாடு சுற்றுலாத்துறை , உலக சுற்றுலா தினக் கொண்டாடத்தின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் பல்வேறு சுற்றுலாத் தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகளை வழங்க உள்ளது . இந்த விருதுகள் சுற்றுலாத் தொழில் முனைவோரையும் , மாநிலத்தில் சுற்றுலா தொடர்புடைய செயல்பாடுகளை செயல்படுத்தும் சுற்றுலா தொழில்புரிவோரையும் ஊக்குவிக்கும் . இந்த விருதுகள் பல்வேறு சுற்றுலா ஆபரேட்டர்கள் , விமான நிறுவனங்கள் , விடுதிகள் , உணவகங்கள் , சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் மாநிலத்தின் சுற்றுலாவை மேம்படுத்துவதில் சாதகமாக பங்களிக்கும் பிற சுற்றுலா நிறுவனங்களுக்கு வழங்கப்படும் . பின்வரும் 15 வெவ்வேறு பிரிவுகளில் உள்ள விருதுகளைஇரண்டாம் முறையாக 27.09.2023 அன்ற