• வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தொழில்முனைவோரும் தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

                மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் 2021-22 ஆம் ஆண்டிற்கான சட்டமன்றக் கூட்டத்தொடரில் சுற்றுலா வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக 30 முக்கிய திட்டங்களை அறிவித்திருந்தார். தமிழ்நாடு சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய பல்வேறு சுற்றுலாத்தொழில் முனைவோருக்கு மாநில சுற்றுலா விருதுகளை வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்குவது அத்தகைய முக்கிய அறிவிப்பாகும். தமிழ்நாடு சுற்றுலாத்துறை, உலக சுற்றுலா தினக் கொண்டாடத்தின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் பல்வேறு சுற்றுலாத் தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகளை வழங்க உள்ளது. இந்த விருதுகள் சுற்றுலாத் தொழில் முனைவோரையும், மாநிலத்தில் சுற்றுலா தொடர்புடைய செயல்பாடுகளை செயல்படுத்தும் சுற்றுலா தொழில்புரிவோரையும் ஊக்குவிக்கும். இந்த விருதுகள் பல்வேறு சுற்றுலா ஆபரேட்டர்கள், விமான நிறுவனங்கள், விடுதிகள், உணவகங்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் மாநிலத்தின் சுற்றுலாவை மேம்படுத்துவதில் சாதகமாக பங்களிக்கும் பிற சுற்றுலா நிறுவனங்களுக்கு வழங்கப்படும். பின்வரும் 15 வெவ்வேறு பிரிவுகளில் உள்ள விருதுகளைஇரண்டாம் முறையாக 27.09.2023 அன்று வழங்கப்படும். விருது வகைகள் பின்வறுமாறு:

1.      சிறந்த உள்வரும் சுற்றுலா ஆபரேட்டர்.

2.      சிறந்த உள்நாட்டு சுற்றுலா ஆபரேட்டர்.

3.      சிறந்த பயண கூட்டாளர்.

4.      சிறந்த விமான கூட்டாளர்.

5.      சிறந்த தங்குமிடம்.

6.      சிறந்த உணவகம்.

7.      தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் சிறந்து செயலாற்றுபவர்.

8.      சுற்றுலா ஆபரேட்டர்.

9.      சிறந்த சாகச சுற்றுலா மற்றும் முகாம் தளம் ஆபரேட்டர்.

10.         சிறந்த கூட்டங்கள் ஊக்குவிப்பு மாநாடு மற்றும் கண்காட்சி

                 (எம்ஐசிஇ) அமைப்பாளர்.

11. சிறந்த சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்.

12.  சிறந்த சுற்றுலா வழிகாட்டி.

13. தமிழ்நாடு பற்றிய சிறந்த விளம்பரம்.

14. சிறந்த சுற்றுலா ஊக்குவிப்பு விளம்பரப் பொருள்.

15. சுற்றுலா மற்றும் விருந்தோம்பலுக்கு சிறந்த கல்வி நிறுவனம்

            மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தொழில்முனைவோரும் உரிய தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த விருதுகள் உலக சுற்றுலா தினத்தன்று (27.09.2023) சென்னையில் வழங்கப்படும். அதற்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்பங்களை www.tntourismawards.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யலாம். விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.08.2023 என மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

 

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.