· தென்மேற்கு பருவ மழை தொடங்கவுள்ள நிலையில் காய்ச்சல் போன்ற பாதிப்புகளிலிருந்து பாதுகாத்து கொள்ளும் வகையில் பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி பருக வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். தென்மேற்கு பருவ மழை தொடங்கவுள்ள நிலையில் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகளிலிருந்து பாதுகாத்து கொள்ளும் வகையில் பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி அருந்த வேண்டும். சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் சுயமாக மருந்து, மாத்திரைகள் எடுப்பதை தவிர்த்து உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அனுக வேண்டும். மேலும் வீட்டை சுற்றியுள்ள இடங்களில் தண்ணீர் தேங்கி இருந்தால் டெங்கு காய்ச்சல் பரவக் கூடிய வாய்ப்புகள் இருக்கும். எனவே ஆட்டுக்கல், சிமெண்ட் தொட்டிகள், டயர், உடைந்த பானைகள், தேங்காய் ஓடுகள், கண்ணாடி பாட்டில்கள், பிளாஸ்டிக் டப்பாக்கள், பூந்தொட்டிகள் குறிப்பாக குளிர்சாதன பெட்டியின் பின்புறம் ஆகியவற்றை நீர் தேங்காமல் பார்த்து கொள்ளவும் மற்றும்அவற்றை அப்புறப்படுத்தவும் வேண்டும். மேலும் பொதுமக்கள் கழிவறையை பயன்ப...