• வேலூர் கோட்டை மைதானத்தில் ரூ.73 இலட்சம் மதிப்பில் சிற்றுண்டியகம், கழிவறை.

·         வேலூர் கோட்டை மைதானத்தில் ரூ.73 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சிற்றுண்டியகம் மற்றும் கழிவறையை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி திறந்து வைத்தார்.

                வேலூர் கோட்டை மைதானத்தில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்காக இந்திய தொல்லியல் துறை சார்பில் ரூ.73 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சிற்றுண்டியகம் மற்றும் கழிவறையை வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி இன்று (31.05.2024) இந்திய தொல்லியல் துறை சென்னை வட்ட முதன்மை கண்காணிப்பாளர் காளிமுத்து முன்னிலையில் பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

                தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் சிற்றுண்டியகம் மற்றும் ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு என தனித்தனியாக அமைந்துள்ள புதிய கழிவறைகளை பார்வையிட்டார்.

                இதனைத் தொடர்ந்து, வேலூர் கோட்டை வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாக உள்ளதால் கோட்டையை சுற்றிப் பார்க்க வருகை தரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான வசதிகளை மேற்கொள்வது குறித்து தொல்லியல் துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில் இன்று  (31.05.2024) வேலூர் கோட்டையில்  நடைபெற்றது.

                இக்கூட்டத்தில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வேலூர் தந்தை பெரியார் பூங்காவினை புனரமைத்து அடுத்த 3 மாத காலத்திற்குள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பாகவும், கோட்டை மைதானத்தில் உள்ள புல்வெளி பகுதிகளில் மின் விளக்குகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது குறித்தும், கோட்டை அகழியை சுற்றி பாதுகாப்பு தடுப்புகள் அமைப்பது குறித்தும்  தொல்லியல் துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

              செய்தி மக்கள் தொடர்பு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வேலூர் அண்ணா கலையரங்கத்தினை புனரமைக்க தொல்லியல் துறையின் அனுமதி பெறுவது குறித்து   இக்கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

                இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அண்ணா கலையரங்கத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து, கலையரங்கத்தில் புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளவதற்கான திட்ட மதிப்பீட்டினை பொதுப்பணித்துறை அலுவலர்கள், செய்தி மக்கள் தொடர்பு துறைக்கு  சமர்ப்பிக்குமாறு தெரிவித்தார்.

              இக்கூட்டத்தில் வேலூர் வருவாய் கோட்டாட்சியர் இரா.க.கவிதா, காவல் துணை கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு, தொல்லியல் துறை வேலூர் கோட்டை பராமரிப்பு அலுவலர் அகல்யா, தோட்டக் கலை துறை அலுவலர் பிரசாந்த் மற்றும் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜெயராமன்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.