• வேலூர் வாக்கு எண்ணும் தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு

·         வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணி  வருகின்ற 04.06.2024 அன்று  நடைபெறுவதை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையத்தில் நேரடியாக கண்காணித்திட நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான முதற்கட்ட  பயிற்சி வகுப்பு.

                வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணி வருகின்ற 04.06.2024 அன்று நடைபெறுவதை முன்னிட்டு, வாக்கு எண்ணும் மையத்தில் நேரடியாக கண்காணித்திட நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் நுண்பார்வையாளர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி இன்று (29.05.2024)  தொடங்கி வைத்தார்.       

இப்பயிற்சி வகுப்பில் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்  
வே.இரா. சுப்புலெட்சுமி, தெரிவித்ததாவது
.

                ஒவ்வொரு  வாக்கு எண்ணும் மேசைக்கும் ஒரு நுண்பார்வையாளர் இருக்க வேண்டும். அந்தந்த மேசையில் வாக்கு எண்ணும் செயல்முறைக்கு நுண் பார்வையாளர் பொறுப்பேற்க வேண்டும். ஒவ்வொரு சுற்றின் வாக்கு எண்ணிகை முக்கியமானதாக இருப்பதால், வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர் மற்றும் எண்ணும் முகவர்கள் தங்கள் கடமைகளைச் செய்வதை உறுதி செய்வதில் நுண் பார்வையாளர்களின் பங்கு மிக முக்கியமானதாகிறது. மேலும் மேசையில் உள்ள நடவடிக்கைகளை கவனிக்க வேண்டும்.

           ஒவ்வொரு சுற்றிலும் எண்ணப்படும் வாக்குகளின் எண்ணிக்கை EVM மூலம் காட்சிப்படுத்தப்படும். நுண் பார்வையாளருக்கு முன் அச்சிடப்பட்ட அறிக்கை வழங்கப்படும், அதில் அவர்கள் கட்டுப்பாட்டு கருவி எண்(CU), சுற்று எண், மேசை எண், வாக்குச் சாவடி எண் மற்றும் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் பெயரையும் அவர்கள் வாக்குச் சீட்டில் குறிப்பிடுவார்கள். நுண் பார்வையாளர் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி மேசையின் வாக்கு விவரங்களையும் வழங்கப்பட்ட மாதிரி படிவத்தில் நிரப்ப வேண்டும். மேலும் அறிக்கையின் முடிவை  தங்கள் கையொப்பமிட்டு ஒவ்வொரு சுற்றுக்குப்  முடிவிற்கு  பிறகு  பார்வையாளரிடம் ஒப்படைப்பார்கள்.

                இந்நிகழ்வின்போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) .செல்வராஜ்,  நுண் பார்வையாளர் அலுவலர்/ துணை பதிவாளர் (பொது விநியோக திட்டம்) சுவாதி, உதவி நுண்பார்வையாளர் அலுவலர் / மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஜமால்மொய்தின் ஆகியோர்  உடனிருந்தனர்.

 

Comments

Popular posts from this blog

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.