Posts

• வேலூர் மாநகராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை.

Image
·         வேலூர் மாநகராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு. வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே . இரா . சுப்புலெட்சுமி , மண்டலம் 3, 54 -வது வார்டில் சுவாமி நகரில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேரில் பார் வையி ட்டு ஆய்வு செய்தார் . இங்கு வீடுகளை சுற்றியுள்ள குப்பைகள் , கொட்டாங்குச்சி , பிளாஸ்டிக் போன்ற பொருட்களை உடனடியாக அகற்றும்படி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார் . தொடர்ந்து வீட்டின் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் கொசு புழுக்கள் முட்டையிடும் அபாயம் உள்ளதால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பிளிச்சீங் பவுடர் கொண்டு சுத்தம் செய்து பராமரிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்திறனார் .   அதனை தொடர்ந்து ஓட்டேரி இந்திரா நகரில் பகுதியில் உள்ள 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கதொட்டியை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து மண்டலம் 3 சாஸ்திரி நகரில் உள்ள நுண்ணுயிர் பிரித்தெடுக்கும் திடக்கழிவு மேலாண்மை ...

• அணைக்கட்டு வளர்ச்சி, திட்டப் பணிகளை வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு.

Image
·         அணைக்கட்டு வட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி மற்றும் திட்டப் பணிகளை வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு ஆய்வு. வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி அணைக்கட்டு வட்டத்தில் சேக்கனூர், ஊசூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி மற்றும் திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் வேலூர் ஒன்றியம், சேக்கனூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்கீழ் (MGNREGS) ரூ.14.18 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் நீர் ஊற்று   புதிய குளம் வெட்டுதல் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.   அதனை தொடர்ந்து அணைக்கட்டு வட்டம், ஊசூர் ஊராட்சியில் ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்டத்தின்கீழ் ரூ.1.50 இலட்சம் மதிப்பில் கூரை ஓடு பதிக்கும் மற்றும் புதுப்பித்தல் பணிகளை பயனாளியின் இருப்பிடத்திற்கு நேரடியாக சென்று   பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைவாக முடிக்கும்படி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர் ஊசூர் ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் ரூ.3.50 இலட்சம் மத...

• எஸ்.ஆர்.எம் பப்ளிக் பள்ளி தனது 8-வது ஆண்டு விழா.

Image
  ·          எஸ் . ஆர் . எம் பப்ளிக் பள்ளி தனது 8 - வது ஆண்டு விழா நாளைக் கொண்டாடுகிறது .       எஸ்ஆர்எம் பப்ளிக் பள்ளி தனது 8- வது ஆண்டு விழா தினத்தை " அதிக திறம்பட மனிதர்களின் 7 பழக்கங்கள் " என்ற கருப்பொருளின் அடிப்படையில் பிரமாண்டமான நாடக இசை நிகழ்ச்சியுடன் கொண்டாடியது . இந்நிகழ்ச்சி SRM இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் & டெக்னாலஜி மற்றும் முழுமையான கல்விக்கான பள்ளியின் அர்ப்பணிப்பின் துடிப்பான காட்சியாக இருந்தது .       இந்நிகழ்ச்சிக்கு எஸ் . ஆர் . எம். கல்வி குழும நிறுவனங்களின் நிறுவனர் அதிபர் . டாக்டர் பாரிவேந்தர் தனது எழுச்சியூட்டும் உரையில் , சிறு வயதிலிருந்தே மாணவர்களிடம் தலைமைத்துவ திறன்களை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார் . அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கத் தயாராக இருக்கும் நன்கு வளர்ந்த நபர்களை வளர்ப்பதற்காக எஸ்ஆர்எம் பப்ளிக் பள்ளியைப் பாராட்டினார் .       டாக்டர் . பி . சத்தியநாராயணன...

• SRM Public School Celebrates Its 8th Annual Day.

Image
  ·         SRM Public School Celebrates Its 8th Annual Day with a Focus on the '7 Habits of Highly Effective People'. Chennai, 28 th September 2024: SRM Public School celebrated its 8 th Annual Day with a grand theatrical musical based on the theme "7 Habits of Highly Effective People." The event took place at the T.P.Ganesan Auditorium, SRM Institute of Science & Technology, and was a vibrant display of the school’s commitment to holistic education. The Chief Guest for the event was Dr.T.R.Paarivendhar - Founder Chancellor of SRM Group of Institutions. In his inspiring address, Dr. Paarivendhar emphasized the importance of developing leadership skills in students from a young age and praised SRM Public School for nurturing well-rounded individuals who are prepared to excel in all walks of life. Dr. P. Sathyanarayanan, Pro-Chancellor (Academics) of SRMIST, presided over the event, highlighting the significant strides SRM Public ...

• வேலூரில் உலக வெறி நோய் தடுப்பு தினம்.

Image
  ·          வேலூரில் உலக வெறி நோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு செல்ல பிராணிகளுக்கு இலவச தடுப்பூசி .         வேலூர் மாவட்டம் , தொரப்பாடியில் உள்ள கால்நடை பரமாரிப்பு துறையின் சார்பில் அங்குள்ள கால்நடை பன்முக மருத்துவ மனையில் உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு இலவசமாக வெறிநோய் தடுப்பூசி முகாமில் ஊசிகள் போடப்பட்டது.                    இதில் வேலூர், சத்துவாச்சாரி, சேண்பாக்கம், கொணவட்டம் , காட்பாடி ஆகிய அனைத்து பகுதிகளிலிருந்து வீட்டில் வளர்க்கும் நாய்கள் மற்றும் செல்ல பிராணிகளுக்கு இலவசமாக வெறி நோய் தடுப்பூசி போடப்பட்டது. இம்முகாமினை கால்நடை மண்டல இணை இயக்குநர் கோபிகிருஷ்ணா துவங்கி வைத்தார். இதில் பன்முக மருத்துவமனையின் பிரதம மருத்துவர் பாண்டியன் உதவி இயக்குநர் அந்துவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பொதுமக்கள் செல்ல பிராணிகளை அழைத்து வந்து தடுப்பூசி போட்டு சென்றனர். ...

• அணைக்கட்டு "உயர்வுக்கு படி" உயர்கல்வி ஆலோசனை.

Image
  ·         10-ஆம் வகுப்பு மற்றும்   12- ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் , தேர்வு எழுதாத இடைநின்ற மற்றும் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு தகுந்த உயர்கல்வி ஆலோசனை வழங்கி திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் " உயர்வுக்கு படி" நிகழ்ச்சி யை வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அணைக்கட்டு வட்டத்தில் தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகளுக்கு உயர்க்கல்வி கல்லூரி சேர்க்கைக்கான ஆணையை வழங்கினார். தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 2023-24 கல்வியாண்டில் கல்லூரி யில் சேர விண்ணப்பிக்காத 10-ஆம் வகுப்பு மற்றும்   12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் , தேர்வு எழுதாத இடைநின்ற மற்றும் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு தகுந்த உயர்கல்வி ஆலோசனை வழங்கி திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் " உயர்வுக்கு படி" நிகழ்ச்சி யை வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, இன்று (28.09.2024) அணைக்கட்டு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார்.           மாண்பும...