• வேலூர் மாநகராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை.

·        வேலூர் மாநகராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு.

வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, மண்டலம் 3, 54-வது வார்டில் சுவாமி நகரில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இங்கு வீடுகளை சுற்றியுள்ள குப்பைகள், கொட்டாங்குச்சி, பிளாஸ்டிக் போன்ற பொருட்களை உடனடியாக அகற்றும்படி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து வீட்டின் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் கொசு புழுக்கள் முட்டையிடும் அபாயம் உள்ளதால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பிளிச்சீங் பவுடர் கொண்டு சுத்தம் செய்து பராமரிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்திறனார். 

அதனை தொடர்ந்து ஓட்டேரி இந்திரா நகரில் பகுதியில் உள்ள 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கதொட்டியை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து மண்டலம் 3 சாஸ்திரி நகரில் உள்ள நுண்ணுயிர் பிரித்தெடுக்கும் திடக்கழிவு மேலாண்மை மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இம்மையத்தில் ஒரு நாளைக்கு மூன்று டன் குப்பைகள் தரம் பிரிக்கப்படுகிறது. இக்குப்பைகளிலிருந்து தயாரிக்கப்படும் உரம் விவசாயத்திற்கு பயன்படுகிறது. மேலும்  இக்குப்பைகளை உரமாக  விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து மாநகராட்சிக்குட்பட்ட வேலம்பாடி சங்கராபாளையம் ஓடையில் பார்வையிட்டு ஆய்வு செய்து, இந்த ஓடையில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றிட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்
வே.இரா.சுப்புலெட்சுமி, உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் ஜானகிரவீந்திரன், உதவி ஆணையர் (மண்டலம் 3) சதயபுல்லா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• பெ.தெ.லீ கல்லூரியில் இயந்திரவியல் துறை கருத்தரங்கம்.

• P.T. Lee கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழா.