• வேலூர் மாநகராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை.
· வேலூர் மாநகராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு. வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே . இரா . சுப்புலெட்சுமி , மண்டலம் 3, 54 -வது வார்டில் சுவாமி நகரில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேரில் பார் வையி ட்டு ஆய்வு செய்தார் . இங்கு வீடுகளை சுற்றியுள்ள குப்பைகள் , கொட்டாங்குச்சி , பிளாஸ்டிக் போன்ற பொருட்களை உடனடியாக அகற்றும்படி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார் . தொடர்ந்து வீட்டின் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் கொசு புழுக்கள் முட்டையிடும் அபாயம் உள்ளதால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பிளிச்சீங் பவுடர் கொண்டு சுத்தம் செய்து பராமரிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்திறனார் . அதனை தொடர்ந்து ஓட்டேரி இந்திரா நகரில் பகுதியில் உள்ள 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கதொட்டியை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து மண்டலம் 3 சாஸ்திரி நகரில் உள்ள நுண்ணுயிர் பிரித்தெடுக்கும் திடக்கழிவு மேலாண்மை மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார் . இ