Posts

• கீ.வ.குப்பம் நலத்திட்ட உதவிகள்.

Image
கீ.வ.குப்பம்   சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 568 பயனாளிகளுக்கு ரூ . 3.74 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிக ள் - வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர், வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் வழங்கின ர்.   வேலூர் மாவட்டம், கீ.வ.குப்பம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்களில் பெறப்பட்ட மனுக்களி ல் 568 பயனாளிகளுக்கு 3 கோடியே 74 இலட்சத்து 63 ஆயிரத்து 40 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் து.மு.கதிர்ஆனந்த், கொண்டசமுத்திரம் ஆர்.ஜி.டி. திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார். இதில் வருவாய் துறையின் சார்பில் உட்பிரிவு அல்லாத பட்டா பெயர் மாற்றம் 43 பயனாளிகளுக்கும், உட்பிரிவுடன் கூடிய பட்டா பெயர் மாற்றம் 146 பயனாளிகளுக்கும், இலவச வீட்டு மனைப் பட்டா 62 பயனாளிகளுக்கும், சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் முதியோர் உதவித் தொகை 144 பயனாளிகளுக்கும், இயற்கை மரணம் உதவித் தொகை 21 பயனாளிகளுக்கும், திருமண உதவித் தொகை 2 பயனாளிகளுக்கும், கல்வி உதவித் தொகை 5 பயனாளிகளுக்கும், புதிய குடும்ப அட்டை 96

• வேலூரில் அமரன் திரைப்படத்தை காண ராணுவ வீரர்கள் குடும்பத்தினர் வருகை.

Image
  ·          வேலூரில் அமரன் திரைப்படத்தை காண ராணுவ வீரர்கள் குடும்பத்தினர் வருகை.       இராணுவ அதிகாரி மேஜர் முகுந்த்வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டு , திரையங்கில் ஓடிக் கொண்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் " அமரன் " திரைபடத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது .                  திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தை வேலூர் அடுத்துள்ள " ராணுவப்பேட்டை " கிராமத்தைச் சேர்ந்த மக்கள் , தங்களது குடும்பத்தில் ஒரு நபராவது ராணுவத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் இத்திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் , இவர்களுக்கு திரைப்படத்தை இன்று இலவசமாக ராஜ்கமல் பிலிம்ஸ் காண்பிக்கப்பட்டது.       முன்னதாக இராணுவ அதிகாரி மேஜர் முகுந்த்வரதராஜன் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர் . இதில் ராணுவபேட்டையைச் சேர்ந்த 250- க்கு மேற்பட்ட ராணுவ வீரர்கள் குடும்பத்தினர் திரைப்படத்தைக் காண   வருகை தந்து கண்டு களித்தனர் .  

• வேலூர் கூட்டுக் குடிநீர் திட்டம் பராமரிப்பு பணிகள்.

·     மேட்டூர் தலைமை நீர் ஏற்றும் நிலையம் மற்றும் பொம்மிடி பகுதிகளில் மின்வாரியத்தின் மூலம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 12.11.2024   மற்றும் 13.11.2024 ஆகிய இரண்டு நாட்களுக்கு வேலூர் கூட்டுக் குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் வழங்க இயலாது .   ·     உள்ளூர் குடிநீர் ஆதாரத்தை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ள   மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.                  ஒருங்கிணைத்த வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் பராமரிக்கப்பட்டு வரும் வேலூர் மாநகராட்சி, 11 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 944 ஊரகக் குடியிருப்புகளுக்கு காவேரி ஆற்றினை நீர் ஆதாரமாகக் கொண்ட திட்டத்தில் உள்ள மேட்டூர் தலைமை நீர் ஏற்றும் நிலையம் மற்றும் பொம்மிடி பகுதிகளில் மின்வாரியத்தின் மூலம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாலும், வாணியம்பாடியில் உள்ள தரைமட்ட நீர்அழுத்த நீர்த்தேக்க தொட்டி பகுதிகளில் பராமரிப்பு பணிகள்   மேற்கொள்ள இருப்பதால்   12.11.2024 ( செவ்வாய்கிழமை) மற்றும் 13.11.2024 (புதன்கிழமை) ஆகிய இரண்டு நாட்களுக்கு வேலூர் கூட்டுக் குடிநீர் திட்டத்திலிருந்து குடிந

• மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை முகாம்.

Image

• வேலூர் மாவட்டத்தில் நவம்பர்-2024 மாதத்திற்கான மனுநீதி நாள் முகாம்.

·         வேலூர் மாவட்டத்தில் நவம்பர் -2024 மாதத்திற்கான மனுநீதி நாள் முகாம் வேலூர் மாவட்டம் , கே . வி . குப்பம் வட்டம் , வடுகந்தாங்கல் உள்வட்டம் , வேலம்பட்டு கிராமத்தில் 13.11.2024 அன்று நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார் .                    வேலூர் மாவட்டத்தில் நவம்பர் -2024 மாதத்திற்கான மனுநீதி நாள் முகாம் கே . வி . குப்பம் வட்டம் , வடுகந்தாங்கல் உள்வட்டம் , வேலம்பட்டு கிரா மம் எல்லம்மாள் லக்சிகான் திருமண மண்டத்தில் 13.11.2024 புதன்கிழமை காலை 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது . இம்முகாம் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து முன்கூட்டியே மனுக்களை பெற்று சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி உரிய முறையில் விசாரணை செய்து அதன் விவரத்தினை மனுதாரர்களுக்கு தெரிவிக்கப்படும் . தகுதியுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் அரசின் நலதிட்ட உதவிகள் சென்றடையும் வகையில் மனுநீதி நாள் முகாம் நடத்தப்படுகிறது .                    மனுநீதி நாள் முகாம் நடைபெறும் வளாகத்தில் சம்மந்தப்பட்ட துறையின் செயல்பாடுகள்

• கீ.வ.குப்பம் ICDS குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்

Image
·         கீ . வ . குப்பம் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக் கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் - மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்தார். வேலூர் மாவட்டம் , கீ . வ . குப்பம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் மூலம் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் பயன்பெறும் குழந்தைகளில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை மற்றும் பெற்றோர்களுக்கு ஊட்டச்சத்து குறித்த ஆலோசனை வழங்குவதற்கான முகாமை வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, லத்தேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடங்கி வைத்தார். வேலூர் மாவட்டத்தில் கீ.வ.குப்பம் ஊராட்சி ஒன்றியம் Focus Block Development Programme என்ற சிறப்பு திட்டத்தின்கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு அனைத்து நிலைகளிலும் முன்னேற்றிட பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் கீ.வ.குப்பம் வட்டார த்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறையில் மூலம் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் பயன்பெறும் குழந்தைகளில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிந்து அக்குழந்தைகளுக்