Posts

• வேலூர் கரும்பு விவசாயிகளுக்கான அரசின் சிறப்பு ஊக்கத்தொகை.

·         வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கான அரசின் சிறப்பு ஊக்கத்தொகை நேரடியாக வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது என வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.  வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு 2024-25 கரும்பு அரவைப்பருவத்தில் வேலூர் மாவட்டத்தில் 876 அங்கத்தினர் மூலம் 44023.195 டன்கள் சப்ளை செய்யப்பட்டது. கரும்பு சப்ளை செய்த அனைத்து அங்கத்தினர்களுக்கும் டன் ஒன்றுக்கு சிறப்பு ஊக்க தொகையாக ரூ. 349 வழங்க அரசாணை மூலம் ஆணையிடப்பட்டு மொத்தம். ரூ. 1.53 கோடி 31.07.2025 அன்று அங்கத்தினர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக அரசாங்கத்தின் மூலம் வரவு வைக்கப்பட்டது. மேலும் இந்த நடவு பருவத்தில் அகல பார் அமைத்து கரும்பு பரு சீவல் நாற்று மூலம் நடவு செய்யும் அங்கத்தினர்களுக்கு மாநில அரசின் மானியமாக ரூ. 18625 எக்டருக்கு வழங்கவும் அகல பார் அமைத்து ஒரு பரு கரணை மூலம் நடவு செய்ய ரூ. 8000 எக்டருக்கு வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. மேலும் PM-RKVY மற்றும் KAVIADP திட்டங்கள் மூலம் பருசீவல் நாற்று நடவு செய்யும் அங்கத்தினர்க ளுக்கு ரூ. 1562...

• வேலூர் மாவட்டத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்.

Image
  ·         வேலூர்   மாவட்டத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்ட ம் - மாவட்ட   வருவாய் அலுவலர் பொதுமக்களிடம் 445   கோரிக்கை மனுக்களை பெற்றார்.                  வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் த.மாலதி தலைமையில்   நடைபெற்றது . மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய் துறை நிலப்பட்டா , பட்டா மாறுதல் , இலவச வீட்டு மனைப்பட்டா , முதியோர் உதவிதொகை வேளாண்மை துறை , காவல் துறை . ஊரக வளார்ச்சி துறை , நகராட்சி நிர்வாகங்கள் , பேரூராட்சி துறை , கூட்டுறவு கடனுதவி , தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார் பாக வீடுகள் வேண்டி , மின்சாரத்துறை சார்பான குறைகள் , மாற்றுத்திறனாளிகள் நலத்துறை . மருத்துவ துறை , கிராம பொதுப்பிரச்சனைகள் , குடிநீர் வசதி , வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 445 மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் பொதுமக்க...

• சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு.

Image
 ·          அமைச்சர் துரைமுருகன் தொகுதியில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கையில் கடலை செடிகள் வாழை கண்ணு , மஞ்சள் உள்ளிட்டவைகளுடன் வந்து நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு                 வேலூர் மாவட்டம் , காட்பாடி பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை ஒன்றை அமைக்க அரசு முயன்று வருகிறது. இதனால் மேட்டுப்பாளையம் தாதிரெட்டிப்பள்ளி , அம்மவார்பள்ளி , பாலமத்தூர் , மகிமண்டலம் ஆகிய கிராமங்களில் இந்த சிப்காட்டிற்காக விவசாயிகளின் விவசாய விளைநிலங்களை கையகப்படுத்தும் முயற்சி தற்போது துவங்கியுள்ளது. அரசு அதிகாரிகள் அத்துமீறி விளை நிலங்களில் புகுந்து நிலங்களை அளவீடு செய்வது மரங்களை கணக்கெடுப்பது விவசாயிகளுக்கு தெரியாமலேயே அவர்களது நிலங்களை அளப்பது போன்ற பணிகளை செய்கிறார்கள்.       விவசாயிகள் இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால் சிப்காட் அமைக்க உங்கள் நி...

• வேலூரில் சிறை மற்றும் சீர்திருத்த நிர்வாக பயிலகத்தில் பட்டங்கள் வழங்கல்.

Image
·          வேலூரில் சிறை மற்றும் சீர்திருத்த நிர்வாக பயிலகத்தில் பயிற்சி முடித்த அதிகாரிகளுக்கு பட்டங்கள் வழங்கல்.                 வேலூர் மாவட்டம் , தொரப்பாடியில் உள்ள சிறை மற்றும் சீர்திருத்த நிர்வாக பயிலகத்தில் கர்நாடகாவை சேர்ந்த 8 சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் கேரளாவை சேர்ந்த 4 சிறைத்துறை அதிகாரிகள் என மொத்தம் 12 அதிகாரிகள் மூன்று மாதங்கள் பயிற்சியை நிறைவு செய்தனர். இதில் கைதியை கையாளுதல், குற்றவியல் சட்டங்கள், சிறை அதிநவீன தொலை தொடர்பு கருவிகளின் பயன்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.        இதன் பயிற்சி நிறைவு விழாவானது சிறை மற்றும் சீர்திருத்த நிர்வாக பயிலகத்தின் இயக்குநர் பிரதீப் பயிற்சி முடித்த அதிகாரிகளுக்கு பதக்கங்கள், சான்றுகளை வழங்கினார். இவ்விழாவில் திரளான சிறைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.         நீங்கள் குற்றவியல் ...

• விவசாயிகள் - தொழில் முனைவோர் – பயிற்சி

Image
·          ” மாற்றங்களின் நாற்றங்கால் ” விவசாயிகள் - தொழில் முனைவோர் – பயிற்சி       வேலூர் மாவட்டம் , இலத்தேரி அருகில் , காளாம்பட்டு, அறிவுத்தோட்டம் வேளாண் சுற்றுலா மற்றும் கருத்துக் களஞ்சியத்தில் ( Arivuthottam Agro Tourism and Resource Repository ), விவசாயிகள் சந்திப்பும் நுண்கீரைகள் பயிற்சியும் மிகச் சிறப்பாக நடை பெற்றது .                 50 நபர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வு காலை முதலே களைகட்டியது . அறிவுத்தோட்டத்தில் நடைபெற்று வரும் விவசாயிகள் சந்திப்பு பல பவுதீக மாற்றங்களுக்கு வித்திட்டுள்ளது .       குறிப்பாக , நம் சந்தைக்கு இங்கு வந்த விவாதமே துவக்கப் புள்ளியாக அமைந்தது . மக்கள் நலச் சந்தை துவக்கவும் பக்க பலமாக அமைந்தது . பல இளைஞர்களுக்கு வழிகாட்டி தெளிவுப்படித்தி தைரியமூட்டி   அனுப்பியுள்ளது . இங்கு நம்பிக்கைப் பெற்ற இளஞர்கள் பல இயங்கங்களை துவக்கியுள்ளார்கள் .       அற...

• ஸ்ரீ சக்தி அம்மா பிறந்த நாள் விளையாட்டு போட்டிகள்.

Image
 ·          ஸ்ரீ   சக்தி அம்மா பிறந்த நாள் விளையாட்டு போட்டிகள்.  

• வேலூர் ஊரிசு கல்லூரியில் நாளை தமிழ் கனவு பண்பாட்டுப் பரப்புரை.

·         வேலூர் ஊரிசு கல்லூரியில் 06.08.2025 அன்று நடைபெறவுள்ள மாபெரும் தமிழ்க் கனவு பண்பாட்டுப் பரப்புரை. ·         கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு   தமிழர்களின் மரபையும் தமிழ்ப் பெருமிதத்தையும் அறிந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார். கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும் தமிழ்ப் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ என்ற பெயரிலான பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வுகள் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளான 03.02.2023 அன்று தொடங்கப்பட்டு , 2022-23 மற்றும் 2023-24 கல்வியாண்டுகளில் , தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,000 கல்லூரிகளை சேர்ந்த ஏறத்தாழ 2 லட்சம் மாணவர்களை சென்றடையும் வண்ணம் 200 இடங்களில் உயர்கல்வி துறையுடன் தமிழ் இணைய கல்விக்கழகம் இணைந்து இந்நிகழ்ச்சியை   சிறப்பாக நடத்தப்பட்டன.    இதன் 100- வது நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் உரையாற்றுகையில் இந்நிகழ்வானது கல்லூரி மாணவர்களிடையே தமிழ் மரபு , தமிழர் தொன்மை , மொழி முதன்மை , சமூக விழ...