• சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு.
· அமைச்சர் துரைமுருகன் தொகுதியில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கையில் கடலை செடிகள் வாழை கண்ணு,மஞ்சள் உள்ளிட்டவைகளுடன் வந்து நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
வேலூர் மாவட்டம், காட்பாடி பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை ஒன்றை அமைக்க அரசு முயன்று வருகிறது. இதனால் மேட்டுப்பாளையம் தாதிரெட்டிப்பள்ளி, அம்மவார்பள்ளி, பாலமத்தூர், மகிமண்டலம் ஆகிய கிராமங்களில் இந்த சிப்காட்டிற்காக விவசாயிகளின் விவசாய விளைநிலங்களை கையகப்படுத்தும் முயற்சி தற்போது துவங்கியுள்ளது. அரசு அதிகாரிகள் அத்துமீறி விளை நிலங்களில் புகுந்து நிலங்களை அளவீடு செய்வது மரங்களை கணக்கெடுப்பது விவசாயிகளுக்கு தெரியாமலேயே அவர்களது நிலங்களை அளப்பது போன்ற பணிகளை செய்கிறார்கள்.
விவசாயிகள் இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால் சிப்காட் அமைக்க உங்கள் நிலங்களை அளவீடு செய்து வருகிறோம் எனவும், மேலும் விவசாயிகளை அதிகாரிகள் மிரட்டுகின்றனர். எனவே சிப்காட் அமைக்கும் திட்டத்தை விவசாயிகளின் நலனை கருதி அரசு கைவிட வேண்டும். உயிரே போனாலும் விளைநிலங்களை விட்டு கொடுக்க மாட்டோம் என விவசாயிகளின் மனுவில் கூறியுள்ளனர்.
அமைச்சர் துரைமுருகன் சொந்த தொகுதியில் சிப்காட் வேன்டாம் என்று விவசாயிகள் பொதுமக்கள் போராட்ட குழு அமைத்து தற்போது போராட துவங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment