• விவசாயிகள் - தொழில் முனைவோர் – பயிற்சி
· ”மாற்றங்களின் நாற்றங்கால்”விவசாயிகள் - தொழில் முனைவோர் – பயிற்சி
வேலூர் மாவட்டம், இலத்தேரி அருகில், காளாம்பட்டு, அறிவுத்தோட்டம் வேளாண் சுற்றுலா மற்றும் கருத்துக் களஞ்சியத்தில் (Arivuthottam Agro Tourism and Resource Repository), விவசாயிகள் சந்திப்பும் நுண்கீரைகள் பயிற்சியும் மிகச் சிறப்பாக நடை பெற்றது.
50 நபர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வு காலை முதலே களைகட்டியது. அறிவுத்தோட்டத்தில் நடைபெற்று வரும் விவசாயிகள் சந்திப்பு பல பவுதீக மாற்றங்களுக்கு வித்திட்டுள்ளது.
குறிப்பாக, நம் சந்தைக்கு இங்கு வந்த விவாதமே துவக்கப் புள்ளியாக அமைந்தது. மக்கள் நலச் சந்தை துவக்கவும் பக்க பலமாக அமைந்தது. பல இளைஞர்களுக்கு வழிகாட்டி தெளிவுப்படித்தி தைரியமூட்டி அனுப்பியுள்ளது. இங்கு நம்பிக்கைப் பெற்ற இளஞர்கள் பல இயங்கங்களை துவக்கியுள்ளார்கள்.
அறிவுத்தோட்டத்தில் நடைபெறும் விவசாயிகள் சந்திப்பின் உண்மைத் தன்மையினை அறிந்து மூன்று மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றுள்ளனர். பல அரசு அதிகாரிகள், விஐடி பல்கலைகழக அதிகாரிகள், கேவிகே முதல்வர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
வேளாண் சுற்றுலா குறித்த மாநில அளவிலான முதல் அறிமுகக் கூட்டம் அறிவுத்தோட்டத்தில் நடைபெற்றது.
அறிவுத்தோட்டத்தில் கூட்டம் என்றால் உற்சாகமும் மகிழ்ச்சியும்தான். இந்தக் கூட்டத்தில் விவசாயிகளுடன், பெண்கள் தொழில் முனைவோர்களும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டது சிறப்பு.
திண்டுக்கல், சென்னை, திருப்பத்தூர், நாட்றம்பள்ளி என பல பகுதிகளிலிருந்து கலந்து கொண்டது சிறப்பு. குழந்தைகளின் கூச்சல்களுக்கும் குறைவில்லை.
பண்ணைப் பார்வையும் விளக்கமும் அளிக்கப்பட்டது. மாலதி இந்த விளக்கங்கள் அளித்தார். பின்பு துவங்கிய கூட்டத்தில் அனைவரும் அறிமுகம் செய்து கொண்ட நிகழ்வே பெரும் அனுபவப் பகிர்வாக அமைந்தது.
அறிவுத்தோட்ட நிகழ்வுகள் மூலம் தலைமைப் பண்பைப் பெற்ற பெண்கள் பகிரும் போது நெகிழ்வாக இருந்தது.
தொடர்ந்து, சி.குணசேகரன், வேளாண் துறை, உதவி விதை அலுவலர் (ஓய்வு), தான் மேற்கொண்டு வரும் புதிய முயற்சிகள் குறித்தும் ஆடிப்பட்டம் குறித்தும் விளக்கம் அளித்தார்.
பின்னர், கங்காதரன் விதை நேர்த்தி விதைகள் பாதுகப்பு குறித்து விளக்கினார்.
கயல்விழி, மகளிர் தொழில் முனைவோர் இணையம் (WAN) நுண்கீரைகள் (Micro Green) வளர்ப்பு குறித்து செய்முறைகளுடன் பயிற்சி அளித்தார்.
தமிழ்நாடு வேளாண் சுற்றுலா அமைப்பில் அறிவுத்தோட்டத்தின் பல்லுயிர் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து வருவதற்காக விருதி வழங்கப்பட்டதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நிறைவுரையாக, சிவசங்கரன், சிவா ஆர்கானிக்ஸ் சத்தான உணவு தேர்வின் அவசியத்தினை விளக்கினார். நல்லதொரு வாசகமும் சொல்லி சென்றார். ”மாவுசத்து சக்கரை , நார்சத்து அக்கரை”
மாலதி-ன் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவுற்றது. பங்கேற்ற அனைவருக்கும் ஒவ்வொரு வகையான தாக்கத்தை இந்தச் சந்திப்பு உருவாக்கி அனுப்பியது. இயற்கையை நேசிப்போம். தொடர்ந்து இணைந்து பயணிப்போம்.
கு.செந்தமிழ் செல்வன், உருவாக்குனர், அறிவுத்தோட்டம். 9443032436.
Comments
Post a Comment