• வேலூர் கரும்பு விவசாயிகளுக்கான அரசின் சிறப்பு ஊக்கத்தொகை.

·        வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கான அரசின் சிறப்பு ஊக்கத்தொகை நேரடியாக வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது என வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார். 

வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு 2024-25 கரும்பு அரவைப்பருவத்தில் வேலூர் மாவட்டத்தில் 876 அங்கத்தினர் மூலம் 44023.195 டன்கள் சப்ளை செய்யப்பட்டது. கரும்பு சப்ளை செய்த அனைத்து அங்கத்தினர்களுக்கும் டன் ஒன்றுக்கு சிறப்பு ஊக்க தொகையாக ரூ.349 வழங்க அரசாணை மூலம் ஆணையிடப்பட்டு மொத்தம். ரூ.1.53 கோடி 31.07.2025 அன்று அங்கத்தினர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக அரசாங்கத்தின் மூலம் வரவு வைக்கப்பட்டது. மேலும் இந்த நடவு பருவத்தில் அகல பார் அமைத்து கரும்பு பரு சீவல் நாற்று மூலம் நடவு செய்யும் அங்கத்தினர்களுக்கு மாநில அரசின் மானியமாக ரூ.18625 எக்டருக்கு வழங்கவும் அகல பார் அமைத்து ஒரு பரு கரணை மூலம் நடவு செய்ய ரூ.8000 எக்டருக்கு வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. மேலும் PM-RKVY மற்றும் KAVIADP திட்டங்கள் மூலம் பருசீவல் நாற்று நடவு செய்யும் அங்கத்தினர்க ளுக்கு ரூ.15625 எக்டருக்கு மானியமாகவும், ஒரு பரு கரணை நடவுசெய்யும் அங்கத்தினர்க ளுக்கு ரூ.5000 எக்டருக்கு மானியமாகவும், அகல பார் அமைத்து நடவு செய்யும் அங்கத்தினர்களுக்கு ரூ.3000 எக்டருக்கு வழங்க ஆணையிடப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. எனவே அங்கத்தினர்கள் பயனடைந்து வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அதிக அளவில் கரும்பு நடவு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• அடுக்கம்பாறையில் நர்வம் கிட்ஸ் மழலையர் பள்ளி .

• வேலூர் வாசகர் வட்டம் - டாக்டர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா.