• பிரம்மபுரம் சஞ்சீவராயர் மலை உச்சியில் காட்சி முனை.
· பிரம்மபுரம் சஞ்சீவராயர் மலை உச்சியில் ரூ.93.09 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய காட்சி முனையை வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் திறந்து வைத்தார். காட்பாடி பிரம்மபுரம் ஊராட்சியில் புதிய காட்சி முனை அமைக்க வேண்டும் என நீர்வள துறை அமைச்சர் துரைமுருகன், சுற்றுலா துறையின் சார்பில் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து ரூ1.00 கோடி மதிப்பீட்டில் வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், சஞ்சீவராயர் மலையில் புதிய காட்சி முனை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனடிப்படையில் காட்பாடி வட்டம், பிரம்மபுரம், ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் சஞ்சீவராயர் மலை உச்சியில் ரூ.93.09 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய காட்சி முனையை வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வே . இரா . சுப்புலெட்சுமி திறந்து வைத்தார். வேலூர் மாவட்டம், காட்பாடி அருகில் உள்ள பிரம்மபுரத்தில் சஞ்சீவிராயர் மலையில் அமைந்துள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் மிகவும் பழைமையான சுயம்பும...