• பிரம்மபுரம் சஞ்சீவராயர் மலை உச்சியில் காட்சி முனை.

·        பிரம்மபுரம் சஞ்சீவராயர் மலை உச்சியில் ரூ.93.09 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய காட்சி முனையை வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் திறந்து வைத்தார்.

                காட்பாடி பிரம்மபுரம் ஊராட்சியில்  புதிய காட்சி முனை அமைக்க வேண்டும் என நீர்வள துறை அமைச்சர் துரைமுருகன், சுற்றுலா துறையின் சார்பில் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து ரூ1.00 கோடி மதிப்பீட்டில் வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், சஞ்சீவராயர்  மலையில் புதிய காட்சி முனை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

 அதனடிப்படையில் காட்பாடி வட்டம், பிரம்மபுரம், ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் சஞ்சீவராயர் மலை உச்சியில் ரூ.93.09 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய காட்சி முனையை வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி திறந்து வைத்தார்.

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகில் உள்ள பிரம்மபுரத்தில் சஞ்சீவிராயர் மலையில் அமைந்துள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் மிகவும் பழைமையான சுயம்புமூர்த்தி திருத்தலமாகும். இக்கோயில் சஞ்சீவிராயர் மலையின் உச்சியில் அமைந்துள்ளது, இங்கு பக்தர்கள் மலைப்பாதை வழியாகவோ அல்லது படிக்கட்டுகள் வழியாகவோ செல்வதற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.. புரட்டாசி சனிக்கிழமைகள் மற்றும் சிறப்பு நாட்களில் திருக்கல்யாண உற்சவங்கள் மற்றும் வழிபாடுகள் இங்கு சிறப்பாக நடைபெறும். 

இந்த காட்சி முனை (View Point) வேலூர் மக்களுக்கு ஒரு சிறந்த பொழுதுபோக்கு இடமாகவும் சமூக மையமாகவும் விளங்கும், மேலும் நமது சமூக ஆரோக்கியத்தையும், இப்பகுதிகள் சுற்று சூழலை மேம்படுத்தும், மேலும் இப்பகுதியில் குடிநீர், நீர்வளமும் மேம்படுத்தப்படுகிறது. இப்பணிகள் தற்போது 100 சதவீதப் பணிகள் முடிவுற்று மாவட்ட ஆட்சி தலைவர் திறந்து வைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டுள்ளது.

 இந்நிகழ்ச்சியில் காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வே.வேல்முருகன், ஒன்றிய குழு துணைதலைவர் எஸ்.சரவணன், ஒன்றிய குழு உறுப்பினர் முனைவர் வி.இலக்கிய சந்துரு, பிரம்மபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜி.ராதாகிருஷ்ணன், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் விமலா சீனிவாசன்,  வேலூர் மாவட்ட சுற்றுலா அலுவலர் (பொ) ம.முத்துச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.

• வேலூர் வாசகர் வட்டம் - டாக்டர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா.