• நவீன நகரளவை திட்டம் பணி.
· நவீன நகரளவை திட்டம் பணி.
வேலுார் மாவட்டம், வேலுார் வட்டத்திற்கு உட்பட்ட கொணவட்டம், அல்லாபுரம், இடையன்சாத்து, தொரப்பாடி, பலவன்சாத்து, சேண்பாக்கம், அரியூர், சத்துவாச்சாரி, அலமேலுமங்காபுரம், விருபாட்சிபுரம் ஆகிய 10 வருவாய் கிராமங்களும் மற்றும் காட்பாடி வட்டத்திற்குட்பட்ட விருதம்பட்டு, தாராபடவேடு, காங்கேயநல்லுார், காட்பாடி, காந்தி நகர், கழிஞ்சூர் ஆகிய 6 வருவாய் கிராமங்கள் அரசாணை நிலை எண்-103(1டி) வருவாய் துறை நாள்:01.03.2007-ன் படி நவீன நகரளவை இத்திட்டதின் கீழ் எடுத்துக் கொள்ளப்பட்டு,
இப்பணியின் முதற்கட்டமாக, வேலுார் வட்டம், அல்லாபுரம் வருவாய் கிராம ஊரக பகுதி முழுவதுமாக நகரளவை பணிகள் மேற்கொள்ளப்பட்டு, வார்டு-6 பிளாக்-1-39 நகரளவை எண்கள்-1793, வார்டு-7 பிளாக்-1-49 நகரளவை எண்கள்-1678, வார்டு-8, பிளாக்-1-36 நகரளவை எண்கள்-1958, வார்டு-9 பிளாக்-1-33 நகரளவை எண்கள்-1762 என நகரளவை புல எண்களாக உடைத்தளவு செய்யப்பட்டு நிலஅளவை (ம) எல்லைகள் குறித்து சட்டப்பிரிவு 13-வது பிரிவின் கீழ் இறுதியாக்கம் செய்யப்பட்டு அல்லாபுரம் நகரளவை தரவுகளை வேலுார் வட்ட அலுவலக பராமரிப்பில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் அல்லாபுரம் நகரளவை தரவுகளை 31.12.2025 அன்று இணையவழி தளத்திற்கும் கொண்டு வரப்பட்டுள்ளது.
வேலுார் வட்டம், அல்லாபுரம் வருவாய் கிராமத்தில் (ஊரக பகுதி) நில உரிமையாளர்கள் (ம) பொது மக்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்யவும், பதிவு ஆவணங்களின் அடிப்படையில் உட்பிரிவுகளுடன் கூடிய (ம) உட்பிரிவு அல்லாத பட்டா மாறுதல் பரிவரித்தனைகள் செய்யவும், பதிவு பெறும் பாக நிலங்களை உட்பிரிவு செய்யவும் https://eservices.tn.gov.in/ என்ற இணையவழி சேவையினை பயன்படுத்தி விண்ணப்பித்து உட்பிரிவு தனிப்பட்டா (ம) பட்டா மாறுதல் உத்தரவு பெற்றும், தரவுகளை பதிவிறக்கம் செய்தும் பெற்று வந்த நிலையில் வேலுார் வட்டம், அல்லாபுரம் வருவாய் கிராம ஊரகப்பகுதி தரவுகள் முழுவதும் நகரளவையில் கொண்டு வந்து இணையவழிப்படுத்தப்பட்டுள்ளது, இனி வரும் காலங்களில் அல்லாபுரம் கிராமத்திற்கு மட்டும் நிலஉடைமைதாரர்கள் (ம) பொது மக்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்யவும்,
உட்பிரிவு மற்றும் பட்டா பரிவர்தனைகளை https://eservices.tn.gov.in/ என்ற இணையவழியில் பொதுசேவை மையங்கள் / (இ-சேவை) மூலமாக விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதால் பொது மக்கள் இச்சேவை மூலம் தங்களின் நிலத்திற்குரிய தரவுகளை பார்வையிட்டு அதன் படி வார்டு, பிளாக், நகர புலஎண்களை அறிந்து அதன் தரவுகளை பதிவிறக்கம் செய்தும், அதன் அடிப்படையில் அளவீடு கோருதல், உட்பிரிவு தனிப்பட்டா (ம) பட்டா மாறுதல் மனுக்களை இணையவழியில் விண்ணப்பித்து கொள்ளலாம். எனவே பொதுமக்கள் அனைவரும் இச்சேவையினை பயன்படுத்தி கொள்ளுமாறு வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment