• விஐடி துணைதலைவர் சங்கர்விசுவநாதனுக்கு பாராட்டு விழா.
· தாய்லாந்து பல்கலைகழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்ற விஐடி துணைதலைவர் சங்கர்விசுவநாதனுக்கு பாராட்டு விழா. தாய்லாந்து பாங்காங் நகரில் உள்ள ராஜமங்கலா பல்கலைகழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்ற விஐடி துணைதலைவர் சங்கர் விசுவநாதன் - க்கு பாராட்டு விழா நடைபெற்றது . விஐடி வேந்தர் முனைவர் கோ . விசுவநாதன் தலைமையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் மற்றும் கலவை சச்சிதானந்த சுவாமிகள் ஆகியோர் விஐடி துணை தலைவர் சங்கர்விசுவநாதனுக்கு அருளாசி வழங்கி வாழ்த்து தெரிவித்தனர் . தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் மு . வெங்கடசுப்பு வரவேற்று பேசினார் . விஐடி வேந்தர் கோ . விசுவநாதன் தலைமை வகித்து பேசும்போது , “ வடஆற்காடு மாவட்டம் கல்வி , பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டமாக உள்ளது . கல்வி ஒன்று தான் நம்மை உயர்த்தும் . அது தான் அழியாத , நிரந்தர செல...