நட்பு என்பது உண்மையான உள்ளன்பாக இருக்க வேண்டும்.
நட்பு என்பது உண்மையான உள்ளன்பாக இருக்க வேண்டும் - பழ . நெடுமாறன் கருத்து. நட்பு என்பது உண்மையான உள்ளன்பாக இருக்க வேண்டும் என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ . நெடுமாறன் பேசினார் . குடியாத்தம் நெல்லூர்பேட்டை நகராட்சி உயர்நிலை பள்ளியில் 1954-1955- ம் ஆண்டு 6- ம் படிவம் படித்த மாணவர்களின் 71- ம் ஆண்டு குடும்பக் கூடல் விழாவின் நிறைவு விழா வேலூரில் நடைபெற்றது . இதில் , உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ . நெடுமாறன் வாழ்த்துரை வழங்கி பேசியதாவது : குடும்பக் கூடல் நிகழ்ச்சி என்பது புதுமையாக இருக்கிறது . இது ஆங்கில அறிஞர் ஜான்சன் சொல்வது போல , பாடும் பறவைகளின் கூடு என்பது போல இங்கே குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக இணைந்துள்ளனர் . விஐடி வேந்தர் விசுவநாதன் பேசும்போது , மாணவர்களின் படிப்பில் பெற்றோர் பங்குதான் அதிகம் என்று சொன்னார்கள் . உண்மை தான் , பெற்றோர்கள்...