• குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா.
குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா - பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்பாடு பணிகள் - வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு. வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரம் , கோபாலபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு கெங்கையம்மன் திருக்கோயில் சிரசு திருவிழா முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சி தலைவர் கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு கெங்கையம்மன் சிரசு புறப்படும் இடமான முத்தாலம்மன் கோயில் , அங்கிருந்து சிர சு வரும் தெருக்கள் , அருள்மிகு கங்கை அம்மன் திருக்கோயில் , கவுண்டன்ய மகா நதியின் இருபுறமும் உள்ள கரைகள் , சாலைகள் மற்றும் பாலங்கள் அமைந்துள்ள பகுதிகளில் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார் . இவ்விடங்களில் தேவையான இடங்களில் தடுப்புகளை அமைக்கவும் , பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்வதற்கான முறையான அறிக்கையினை அ ளி க்கவும் காவல்துறை அலுவலர்களிடம் தெரிவித்தார் . கெங்கையம்மன் சிரசு திருவிழாவின் போது செல்ல உள்ள திர...