Posts

• குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா.

Image
குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா - பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும்   முன்னேற்பாடு பணிகள் - வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு. வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரம் , கோபாலபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு கெங்கையம்மன் திருக்கோயில் சிரசு திருவிழா முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சி தலைவர் கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு கெங்கையம்மன் சிரசு புறப்படும் இடமான முத்தாலம்மன் கோயில் , அங்கிருந்து சிர சு வரும்   தெருக்கள் , அருள்மிகு கங்கை அம்மன் திருக்கோயில் , கவுண்டன்ய மகா நதியின் இருபுறமும் உள்ள கரைகள் , சாலைகள் மற்றும் பாலங்கள் அமைந்துள்ள பகுதிகளில் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார் . இவ்விடங்களில் தேவையான இடங்களில் தடுப்புகளை அமைக்கவும் , பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்வதற்கான முறையான அறிக்கையினை அ ளி க்கவும் காவல்துறை அலுவலர்களிடம் தெரிவித்தார் . கெங்கையம்மன் சிரசு திருவிழாவின் போது செல்ல உள்ள திர...

• குடியாத்தம் மதுபான கடை மூட வைக்க உத்தரவு.

குடியாத்தம் மதுபான கடை மூட வைக்க உத்தர வு .                  தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கிவரும் டாஸ்மாக் மதுபான சில்லறை கடைகளான குடியாத்தம் வட்டத்தில் அமைந்துள்ள கடை எண்.11038 மற்றும் கடை எண்.11033 ஆகிய மதுபான கடைகள் 15.05.2026 (வெள்ளிக்கிழமை) அன்று அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் சிரசு ஊர்வல திருவிழா என்பதால், அன்றைய தினத்தில் மதுபான கடைகளை மூடி வைக்க வேண்டும் என சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் அவர்களால் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் சிரசு ஊர்வல திருவிழா தினமான 15.05.2026 அன்று ஒருநாள் மட்டும் குடியாத்தம் வட்டத்தில் அமைந்துள்ள 2 மதுபான கடைகளான கடை எண்.11038 மற்றும் கடை எண்.11033 டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் , மூடப்படும் எனவும், அன்றை தினத்தில் மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி தினத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தால், சம்மந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை ...

• முன்னாள் படை வீரர்களின் சிறார்களுக்கு சான்று.

முன்னாள் படை வீரர்களின் சிறார்களுக்கு 2026-2027 கல்வி ஆண்டில் கல்லூரியில் சேர சார்ந்தோர் சான்று பெற்று பயனடைய வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார். 2026-2027-ஆம் கல்வி ஆண்டிற்கு கல்லூரி சேர்க்கையின்போது முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு பட்டயப்படிப்பு மற்றும் தொழிற் கல்விகளுக்கு தமி ழ்நாடு அரசால் சிறப்பு இட ஒதுக்கீட்டின் வாயிலாக கல்லூரிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க படைவிலகல் சான்றில் தமிழ்நாடு முகவரியை கொண்ட வேலூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர்கள் மற்றும் அவர்தம் கைம்பெண்கள் 2026-2027-ஆம் ஆண்டிற்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல், + 2 மதிப்பெண் சான்று, படை விலகல் சான்று மற்றும் அடையாள அட்டையுடன் வேலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை அணுகி சார்ந்தோர் சான்று பெற்று பயனடையுமாறும்,   கடந்த ஆண்டு பெற்ற சார்ந்தோர் சான்றினை பயன்படுத்த கூடாது எனவும் வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.