• வேலூர் கம்பன் கழகம் - கண்ணதாசன் நூற்றாண்டு விழா.
· வேலூர் கம்பன் கழகம் சார்பில் கண்ணதாசன் நூற்றாண்டு விழா . · வி . ஐ . டி துணைதலைவர் ஜி . விசெல்வம் கலந்து கொண்டு கண்ணதாசன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி புகழாஞ்சலி. வேலூர் கம்பன் கழகம் , வேலூர் ஊரீசு கல்லூரி தமிழ் துறை சார்பில் கவியரசர் கண்ணதாசன் நூற்றாண்டு விழா ஊரீசு கல்லூரி காப் அரங்கில் நடைபெற்றது . விழாவிற்கு வேலூர் கம்பன் கழக தலைவரும் , வி . ஐ . டி . துணைதலைவருமான ஜி . வி . செல்வம் தலைமை தாங்கி , கம்பன் , கண்ணதாசன் உருவப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி பேசியதாவது , வேலூர் கம்பன் கழகம் , கம்பன் விழாவை மட்டும் கொண்டாடாமல் கண்ணதாசனையும் கொண்டாடும் . உலக தாய்மொழி தினத்தையும் கொண்டாடும் . கண்ணதாசன் ஒரு நாத்திகவாதியாக இருந்து ஆத்திகவாதியாக மாறியவர் . அவர் நாத்திகவாதியாக இருந்த காலகட்டத்தில் ...