• தனியார் பள்ளிகளின் மாவட்டக் கல்வி அலுவலராக கோ.பழனி பொறுப்பேற்பு
வேலூர் மாவட்ட தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலராக கரிகிரி உயர்நிலை பள்ளியின் தலைமையாசிரியர் கோ . பழனி தற்காலிக பொறுப்பேற்றுள்ளார். இந்த பதவியில் ஏற்கெனவே பணியிலிருந்த தாம்சன் என்பர் நாகர்கோவிலுக்கு மாறுதல் செய்யப்பட்டதால் இப்பணிக்கு தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டுள்ளார் . கோ . பழனி தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலராக பொறுப்பேற்று கொண்டதற்காக ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் மற்றும் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் செ . நா . ஜனார்த்தனன் , ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்ட குழு உறுப்பினரும் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநிலத்தலைவரும் அலுவலக கண்காணிப்பருமான அ . சேகர், கல்வி உலகம் அரசு உதவிபெறும் பள்ளியின் தலைமையாசிரியர் எஸ் . எஸ் . சிவவடிவு , தமிழக தமிழசிரியர் கழக மாநில செயலாளர் வாரா , தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் ஜி . டி . பாபு , மேலும் தமிழ்நாடு மேல்நி...