• தனியார் பள்ளிகளின் மாவட்டக் கல்வி அலுவலராக கோ.பழனி பொறுப்பேற்பு
வேலூர் மாவட்ட தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலராக கரிகிரி உயர்நிலை பள்ளியின் தலைமையாசிரியர் கோ.பழனி தற்காலிக பொறுப்பேற்றுள்ளார். இந்த பதவியில் ஏற்கெனவே பணியிலிருந்த தாம்சன் என்பர் நாகர்கோவிலுக்கு மாறுதல் செய்யப்பட்டதால் இப்பணிக்கு தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கோ.பழனி தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலராக பொறுப்பேற்று கொண்டதற்காக ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் மற்றும் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன், ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்ட குழு உறுப்பினரும் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநிலத்தலைவரும் அலுவலக கண்காணிப்பருமான அ.சேகர், கல்வி உலகம் அரசு உதவிபெறும் பள்ளியின் தலைமையாசிரியர் எஸ்.எஸ்.சிவவடிவு, தமிழக தமிழசிரியர் கழக மாநில செயலாளர் வாரா, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் ஜி.டி.பாபு, மேலும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெயதேவரெட்டி, காட்பாடி ஆண்கள் பள்ளி தலைமையாசிரியர் கே.எம்.ஜேதீஸ்வரபிள்ளை, உதவி தலைமையாசிரியர் எஸ்.குமரன் முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (இடைநிலை) கோபாலகிருஷ்ணன், தலைமையாசிரியர்கள் கோக்கலுர் சுரேஷ், கொணவட்டம் ஜி.தாமோதரன், எம்.ஆனந்தநாயுடு, எஸ்.உமாபதி, சண்முகம், அலுலக பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் கே.சுரேஷ், பதிவு எழுத்தர் பி.ராமு, தட்டச்சர் டி.எம்.ஞானசண்முகம், தனியார் பள்ளி நிர்வாகிகள் டி.வி.சிவபெருமான், விஜயகுமார், பி.செந்தில்வேல், பி.சந்திரசேகரன், கோபால், உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொண்டனர்.
Comments
Post a Comment