• பழங்குடியின மக்களுக்கு வீடு கட்டிதர வேண்டும், வனபாதுகாப்பு திருத்த சட்டம் திரும்ப பெற வேண்டும் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் ஆர்பாட்டம்
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் மகாலிங்கம் தலைமையில் மனு கொடுக்கும் இயக்க ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில பொதுசெயலாளர் சரவணன், கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் தயாநிதி உள்ளிட்டோரும் திரளான மலைவாழ் மக்களும் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வன உரிமை சட்டம் 2006-ஐ தீவிரமாக அமலாக்கம் செய்ய வேண்டும், நிலுவையில் உள்ள மனுக்களை பரிசீலித்து உடனடியாக பட்டா வழங்க வேண்டும், வனவிலங்குகளால் ஏற்படும் மனித உயிரிழப்புகள், பயிர் சேதங்களுக்கு இழப்பீட்டுத்தொகையை வழங்க வேண்டும்.
கேரள அரசு வழங்குவதைபோல் பழங்குடியின மக்களுக்கு ரூ.10 லட்சத்தில் வீடு கட்டித்தர வேண்டும். வனபாதுகாப்பு திருத்த சட்டம் 1980-ஐ திரும்ப பெற வேண்டும். காட்பாடி குறவன் குடிசை, ஒட்டனேரி , எம்ப்ளாளூர் ஆகிய பகுதிகளில் வீட்டுமனைப்பட்டா வழங்கி சாலை வசதி உள்ளிட்டவைகளை ஏற்படுத்தி தர வேண்டும். பீஞ்சமந்தை அல்லேரி ஆகிய மலை கிராமங்களுக்கு சாலை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
பேட்டி: சரவணன் (மலைவாழ் மக்கள் சங்க மாநில பொதுசெயலாளர்)
Comments
Post a Comment