• ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதும் செந்தில் பாலாஜி டிஸ்மிஸ் செய்யப்பட்டதும் அகில இந்திய அளவில் பிரளயத்தை ஏற்படுத்தும் - வேலூரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி.

 

     வேலூர் அண்ணாகலையரங்கம் அருகில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுகூட்டம் மாநகர செயலாளர் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இதில் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

      இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில்,

      தமிழக ஆளுநர் ரவி அவர்கள் செந்தில்பாலாஜி நீக்கம் குறித்து நோட்டீஸ் கொடுத்திருக்கிறார். அவ்வாறு செய்ய அவர் யார் அவருக்கு அதிகாரமில்லை. அமைச்சரவைக்குதான் எல்லா அதிகாரமும் உண்டு. ஆளுநருக்கு அதிகாரம் எல்லாம் கிடையாது. அவர் கொடுத்துள்ள நோட்டீஸை நாளை பெற்றுகொண்டு உச்சநீதிமன்றத்தில் திமுக சட்டபடி வழக்கு தொடுத்து சந்திக்க இருக்கிறோம்.

      மணிபூரில் பெரிய கலவரம் நடக்கிறது. அதனை உயிரை பணயம் வைத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரில் சென்று மக்களை சந்திக்க சென்றால் அங்கு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். இந்த விவகாரமும் செந்தில்பாலாஜி டிஸ்மிஸ் விவகாரமும் இந்தியாவில் ஒரு பிரளயத்தை ஏற்படுத்தும். இந்த  ஆளுநரை மோடியே நினைத்தாலும் காப்பாற்ற முடியாது. நீதிமன்றம் செல்கிறோம் நாளை நீதிமன்றமே கூட மோடி ஆட்சியை கலைக்கலாம் அந்த நிலை ஏற்படும் என பேசினார்.

          பின்னர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் கூறுகையில், திமுக பல்வேறு வழக்குகளை சந்தித்தது. இந்த வழக்கையும் சந்திப்போம். பதவி நீக்கம் என ஆளுநர் சொன்னது தப்பு அவருக்கு அதிகாரமே கிடையாது. ஏற்கனவே உச்சநீதிமன்றம் இரண்டு கவர்னர்களுக்கு கொட்டு வைத்தது. ஆனால் தமிழக கவர்னரும் அதேபோல் செயல்படுகிறார். சட்டரீதியாக இதனை சந்திப்போம்.

      இந்தியாவிலே மாநிலங்களுக்கு எடுத்துகாட்டாக சுயாட்சியை காப்பாற்றும் வகையில் தீர்ப்பை பெறுவோம். அமித்ஷா, மோடி மீதும் 300 எம்பிக்கள் மீதெல்லாம் வழக்கு இருக்கிறது. மோடி மீதே குஜராத் கலவர கொலை வழக்கு உள்ளது. நோட்டீஸ் வழங்க ஆளுநருக்கு அதிகாரமே இல்லை. உச்சநீதிமன்றம் ஆதராமிருந்தால் ஆளுநர் அதனை நிருபிக்கட்டும். இதில் முகாந்திரம் மட்டுமே உள்ளது. அப்படி பார்த்தால் அமித்ஷா உள்துறை அமைச்சராகி இருக்ககூடாதே. ஜெயலலிதா இருக்கும்போது அவரால் உருவாக்கப்பட்டவர்தான் செந்தில்பாலாஜி என கூறினார்.

 பேட்டி: ஆர்.எஸ்.பாரதி (திமுக அமைப்பு செயலாளர்)

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.