• நல்லவைகள் பேசுங்கள் அல்லவைகள் பேசாதீர்கள்
· நல்லவைகள் பேசுங்கள் அல்லவைகள் பேசாதீர்கள் – 65 -வது மடாதிபதி விஸ்வகர்ம ஜெகத்குரு சிவராஜ ஞானாச்சரிய சுவாமிகள் புத்தாண்டு அருளுரை. விஸ்வகர்ம நண்பர்கள் நலச்சங்கத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டமும் 2024- ஆம் ஆண்டிற்கான நாட்காட்டி வெளியீட்டு விழா இன்று வேலூர் காந்தி ரோடு , கே . வி . எஸ் . செட்டித் தெருவில் அமைந்துள்ள ஶ்ரீவீரபிரம்மங்கார் மடத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு சங்கத்தின் தலைவர் சி . தேஜோமூர்த்தி தலைமை தாங்கினார் . ஒருங்கிணைப்பாளர் ஞான . நடராஜன் தொகுப்புரையாற்றினார் . பொருளாளர் ஜெ . மணிஎழிலன் வரவேற்று பேசினார் . நிறுவனர் மற்றும் செயலாளர் செ . நா . ஜனார்த்தனன் சங்க செயல்பாடுகள் குறித்து பேசினார் . துணைதலைவர்கள் எல் . பன்னீர்செல்வம் , எம் . ஞானசம்பந்தம், துணைசெயலாளர் கோ . சுவாமிநாதன் , விஸ்வமலர் குழு தலைவர் ம . அன்பரசு ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர் . புதிய வருட நாட்காட்டி வெளியீடு:...