• வேலூரில் தேசிய அளவிலான சப்-ஜூனியர் சாப்ட் டென்னீஸ் போட்டிகள்

 ·         வேலூரில் தேசிய அளவிலான சப்-ஜூனியர் சாப்ட் டென்னீஸ் போட்டிகள் - தமிழக அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.

     வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள வேலூர் தொழில்நுட்ப பல்கலை கழகத்தில் சாப்ட் டென்னீஸ் சங்கம் சார்பில் அகில இந்திய அளவிலான சாப்ட்  டென்னீஸ் 17-வது சப்-ஜூனியர் போட்டிகள் கடந்த 26-ஆம் தேதி துவங்கியது. இப்போட்டிகள் 30-ஆம் தேதி வரையில் ஐந்து நாட்கள் நடைபெற்றது.

     இதில் இந்தியா முழுவதும் இருந்து 26 மாநிலங்களை சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடினார்கள். இதில் இரட்டையர் ஆண்கள் போட்டியில் மத்திய பிரதேசை சேர்ந்த நிப்பிலியும், பெண்கள் பிரிவில் தமிழ்நாட்டை சேர்ந்த நிஷாலினி இரட்டையர்கள் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றனர்.

     இதேபோன்று கலப்பு  இன போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த ரிஷ்வந்த், நிஷாலினி தங்கப்பதக்கத்தையும், இரண்டாம் பரிசு குஜராத்தை சேர்ந்த ஜெய்பீம் பிரிவும் வென்றது.

     ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை ஓவர் ஆல் பட்டம் தமிழ்நாடு அணி கைப்பற்றியது. வெற்றி பெற்றவர்களுக்கு சாப்ட் டென்னீஸ் தமிழக தலைவர் அர்ஜுனன், செயலாளர் கவிதா ஆகியோர் பரிசுகளையும் கோப்பைகளையும் வழங்கினார்கள்.

     இதில் மண்டல விளையாட்டு அலுவலர் நொய்லின் ஜான், டென்னீஸ் சங்க துணைதலைவர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஒற்றையர் பிரிவில் ஆண்கள் பிரிவில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த சனிக்யாவும், பெண்கள் பிரிவில் தமிழ்நாட்டை சேர்ந்த நிஷாலினியும் தங்கப்பதக்கம் வென்றனர்.

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.