67-ஆவது தேசிய அளவிலான சதுரங்க போட்டி

 ·        பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற 67-ஆவது தேசிய அளவிலான சதுரங்க போட்டி.

·        வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கோப்பைகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.

            பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் வேலூர் மாவட்டம், ஸ்ரீபுரம் நாராயணி மஹாலில் நடைபெற்ற 67-வது தேசிய சதுரங்க போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பெ.குமாரவேல்பாண்டியன், இன்று (30.12.2023) கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் வேலூர் மாவட்டம், ஸ்ரீபுரம், நாராயணி மஹாலில் 67-வது தேசிய அளவிலான சதுரங்கப் போட்டிகள் 26.12.2023 அன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

 இப்போட்டிகளில் நாடு முழுவதும் உள்ள 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 421 மாணவர்கள் மற்றும் 402 மாணவிகள் பங்கு பெற்று போட்டிகளில் கலந்து கொண்டனர். இப்போட்டிகள் 14 வயதிற்கு உட்பட்டோர்,  17 வயதிற்கு உட்பட்டோர் மற்றும் 19 வயதிற்கு உட்பட்டோர் என மூன்று பிரிவுகளில்  நடைபெற்றது. ஒவ்வொரு பிரிவிலும் ஆண்களுக்கு தனியாகவும் பெண்களுக்கு தனியாகவும் போட்டிகள் நடைபெற்றது.

                ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடம் பிடித்த அணிக்கு தங்கப்பதக்கமும், இரண்டாம் இடம் பிடித்த அணிக்கு வெள்ளிப் பதக்கமும், மூன்றாம் இடம் பிடித்த அணிக்கு வெண்கல பதக்கமும் மற்றும் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித் தலைவர் பெ.குமாரவேல்பாண்டியன் இன்று வழங்கினார்.

தேசிய அளவிலான இந்த சதுரங்க போட்டிகளில் கலந்து கொண்ட தமிழ்நாடு மாநிலத்தை சேர்ந்த பள்ளிகளில் ஆண்கள் பிரிவில் 19 வயதிற்கு உட்பட்டோர்,  17 வயதிற்கு உட்பட்டோர்,  14 வயதிற்கு உட்பட்டோர் ஆகிய மூன்று பிரிவுகளில் தங்கப்பதக்கமும்,  பெண்கள் பிரிவில் 19 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் தங்கப்பதக்கமும் வென்றுள்ளனர். மேலும் மாணவிகளுக்கான 17 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளனர்.

இப்போட்டிகளில் முதல் பரிசினை அதாவது தங்கப்பதக்கம் வென்றுள்ள தமிழ்நாடு மாநில பள்ளிகளின் மாணவ, மாணவிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின்  சிறப்பு ஊக்கதொகை தலா ரூ.2 லட்சத்திற்கான பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. மேலும் இரண்டாம் இடம் அதாவது வெள்ளிப் பதக்கம் வென்ற மாணவ,  மாணவிகளுக்கு ரூபாய் 1.50 லட்சத்திற்கான பரிசு தொகையும் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார், வி.அமுலுவிஜயன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், துணை மேயர் எம்.சுனில்குமார்,  பள்ளிக்கல்வி இயக்குநர் (தொடக்க கல்வி)  கண்ணப்பன்,  மண்டல குழு தலைவர் வெங்கடேசன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சரஸ்வதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.