• காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்தின் மேலாண்மைக்குழு கூட்டம்

 ·         காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்தின் மேலாண்மைக்குழு கூட்டம் - மாதாந்திர நாட்காட்டியினை கோட்டாட்சியர் ஆர்.கே.கவிதா, மாவட்ட வருவாய் அலுவலர் .மாலதி ஆகியோர் வெளியிட்டார்கள்.

     வேலூர் மாவட்டம், காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின்  மேலாண்மைக்குழு கூட்டம் மற்றும்  சங்கத்தின் 2024-ஆம் ஆண்டிற்கான மாதாந்திர நாள்காட்டி வெளியீட்டு விழா சங்கத்தின் தலைவரும் வேலூர்  வருவாய் கோட்டாட்சியர் ஆர்.கே.கவிதா தலைமையில் நடைபெற்றது.  

  முன்னதாக அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்று பேசினார்.           அவை துணைத்தலைவர் ஆர்.விஜயகுமாரி, இரா.சீனிவாசன், பொருளார் வி.பழனி, ருக்ஜி.ராஜேஸ்குமார், மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் டாக்டர் வீ.தீனபந்து, ஆர்.ராதாகிருஷ்ணன், ஜி.செல்வம், எஸ்.ரமேஷ்குமார்ஜெயின், கே.அந்தோனி பாஸ்கரன், தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநில தலைவர் .சேகர், வருவாய் துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தீனதயாளன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

     பின்னர் 2024-ஆம் ஆண்டிற்கான சங்கத்தின் மாதாந்திர நாட்காட்டியினை வேலூர் உதவி ஆட்சியர் ஆர்.கே.கவிதா வெளியிட அவைதலைவர் செ.நா.ஜனார்த்தனன் பெற்றுக்கொண்டார்.   பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் .மாலதி, மாவட்ட வழங்கல் அலுவலர் பி.சுமதி சந்தித்து காலண்டர் வெளியிட நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர்.

பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

 2024-ஆம் ஆண்டிற்கான வருடாந்திர செயல்பாடுகளை வடிவமைத்து சிறப்பாக செயல்படுத்துவது.

             பொங்கல் விழா சிறப்பாக நடத்துவது என்றும் இவ்விழாவில் கடந்த ஆண்டில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பாராட்டுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.