• வேலூரில் பழுதடைந்த பள்ளிவாசல்களை புதுப்பிக்க வக்பு வாரியம் ரூ.1.25 கோடி மதிப்பிலான காசோலைகள்.

 ·         வேலூரில் பழுதடைந்த பள்ளிவாசல்களை புதுப்பிக்க தமிழக அரசின் சார்பில் வக்பு வாரியம் ரூ.1.25 கோடி மதிப்பிலான காசோலைகள் - அமைச்சர் மஸ்தான் வழங்கினார். 

     வேலூர், சாய்நாதபுரத்தில் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் சார்பில் மாநில அரசு பழுதடைந்த பள்ளி வாசல்கள் தர்காக்கள், கபரஸ்தான் போன்றவைகளின் பழுதுகளை நீக்க நிதி ஒதுக்கப்பட்டது.

     இதன் அடிப்படையில் திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்த பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு காசோலைகள் வழங்கும் விழா சிறுபான்மை நலன் மற்றும் அயலக வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் காசோலைகளை வழங்கினார். சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், சரவணன், நல்லதம்பி உள்ளிட்டோரும் மற்றும் இஸ்லாமியர்கள் திரளானோர் இதில் கலந்து கொண்டனர்.

                இவ்விழாவில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசுகையில்,

     கிராமப்புறங்களில் வீடில்லா ஏழை சிறுபான்மையினருக்கு ஏக்கர் ரூ.15 ஆயிரத்திற்கு வழங்குகிறோம் எனவும்,

                பின்னர் அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களிடம் கூறுகையில், முதல்வர் ஆணைக்கிணங்க சிறுபான்மை நலனுக்காக துறையை உருவாக்கி பள்ளிவாசல்கள், தர்காக்கள், கபர்ஸ்தான், பழுதை சீரமைக்க இந்த ஆண்டு தமிழக அரசு 10 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. அதற்காக காசோலைகளை பெறுகிறோம்.

     மேலும் தேவைப்படும் இடங்களில் நிதி அளிக்கவும் கோரிக்கை மனுக்கள் பெறப்படுகிறது. வேலூரிலும் இதுபோன்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதனையும் செய்து தரவுள்ளோம். சிறுபான்மை மக்கள் கல்வி பெற நிதி ஒதுக்கப்பட்டு, மாதம் ரூ.500/- மற்றும் ரூ.1,000/- வழங்கி வருகிறோம். நலவாரிய உறுப்பினர்கள் நிதியை பெற நடவடிக்கை எடுத்துள்ளோம்.

     சிறுபான்மை மகளிர் சங்கங்களுக்கும் நிதியை ஒதுக்கியுள்ளோம்.  மேலும் இந்த ஆண்டு ரூ.74 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. மகளிர் கடனாக வழங்கப்பட்டுள்ளது. சிறுபான்மை மக்கள் அரணாக உள்ள முதல்வருக்கு மக்கள் ஆதரவை வழங்குகிறார்கள். இலங்கை தமிழர் குடியிருப்புகள் 3,500 வீடுகள் கட்ட முடிவு செய்து வேலூரில் 1,500 வீடுகளை முதல்வர் திறந்து வைத்தார்.

     அனைத்து மாவட்டங்களுக்கும் நிதி ஒதுக்கி இலங்கை தமிழர் குடியிருப்பு கட்டும் பணிகள் நடந்து வருகிறது. அரசாங்கம் ரூ.15 லட்சம் மதிப்பில் சிறுபான்மை கிராமப்புற வீட்டு மனைகள் வழங்கவுள்ளோம். வக்பு வாரிய ஆக்கிரமிப்புகள் மீட்கும் பணிகள் நடந்து வருகிறது. 250 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. நலவாரியம் மூலம் வக்பு வாரியத்திடம் சொத்துகள் ஒப்படைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. என்ன நோக்கத்திற்காக வக்பு வாரியத்திற்கு கொடுத்தாரோ அந்த நோக்கம் நிறைவேறவேண்டும். இல்லையென்றால் அதை ஆக்கிரமிப்பாக கருதி சொத்துக்களை மீட்கிறோம் என்று கூறினார் .

பேட்டி: செஞ்சி மஸ்தான் (சிறுபான்மை மற்றும் அயல்வாழ் தமிழர் நலதுறை அமைச்சர்)

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.