• எஸ்.ஆர்.எம். இரண்டு மருத்துவ புத்தகங்கள் வெளியீடு விழா

 ·         எஸ்.ஆர்.எம் மருத்துவம் மற்றும் சுகாதார அறிவியல் துறை சார்பில் இரண்டு மருத்துவ புத்தகங்கள் வெளியீடு விழா.

·         எஸ்.ஆர்.எம் பல்கலைகழக நிறுவனர் டி.ஆர்.பாரிவேந்தர்,MP, இணைவேந்தர் பா.சத்தியநாராயணன் பங்கேற்பு.

     செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளதூரில் உள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவம் மற்றும் சுகாதார அறிவியல் துறை சார்பில் புத்தகங்கள் வெளியீடு விழா நடைபெற்றது. இதில் எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தின் நிறுவனரும், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாரிவேந்தர், இணைவேந்தர் பா.சத்தியநாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் இணைதுணைவேந்தர் பேராசிரியர் ரவிக்குமார் எழுதிய 'ENT-யின் எசென்ஷியல்ஸ்', மருத்துவம் முதல்வர் டாக்டர் நிதின் எம் நகர்கர் எழுதிய அட்லஸ் ஆஃப் ஹெட், நெக் & ஸ்கல் பேஸ் சர்ஜரி” என்ற இரண்டு புத்தகத்தை வெளியிட்டனர்.

     இந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தின் நிறுவனர் டி.ஆர்.பாரிவேந்தர், இந்தியாவில் பலர் பல புத்தகங்களை வெளியிட்டு இருந்தாலும் நமது பல்கலை கழகத்தில் பல தலைப்புகளில், பல்வேறு துறையின் சார்பில் புதிய கண்டுப்பிடிப்புகளை புத்தகங்களாக வெளியிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

     மேலும் கொரோனா காலத்தில் எந்த மருத்துவ கல்லூரியும் செய்யாத சாதனை நமது மருத்துவ கல்லூரி சாதனை செய்து உள்ளது. கொரோனா காலத்தில் நமது மருத்துவ கல்லூரி சார்பில் கொரோனா தடுப்பு மருந்துகளை கண்டுப்பிடித்து அதனை வழங்கியும், சிறப்பான சிகிச்சைகளையும் வழங்கி சாதனை படைத்ததை நினைவு கூறும் வகையில் பெருமிதம் தெரிவித்தார்.

     இரண்டு பேராசிரியர்களும் தங்களது ஆழ்ந்த அனுபவங்களையும், படைப்புகளையும், புத்தகங்களாக வெளியிட்டு உள்ளனர். இரண்டு புத்தகங்களும் பெரிய பெரியதாக உள்ளதை பார்க்கும்போது ஒரு மனிதனுக்கு காது, மூக்கு, தொண்டை மற்றும் தலை, கழுத்து மற்றும் மண்டை பகுதி முழுமையாக செயல்பட வேண்டும். அப்போதே மனிதன் வளர்ச்சி அடைய முடியம் என்பதை உணர்த்துகிறது என்பதை தெரிவித்தார்.

  மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இணைவேந்தர் பா.சத்தியநாராயணன் கூறுகையில், இந்த இரண்டு புத்தகங்களை பார்க்கும்போது அவர்களது 10 ஆண்டுகள் ஆராய்ச்சி அனுபவத்தையும், கடுமையான உழைப்பையும் வெளிப்படுத்தி உள்ளனர். இவர்கள் எழுதிய இரண்டு புத்தகங்களும் அடுத்த தலைமுறைக்கு பின்பற்றக்கூடிய வகையில் படைத்துள்ளனர். அதுமட்டுமின்றி இதுபோன்ற புத்தகங்கள் வெளியீட்டு நிகழ்ச்சிகள் இன்னும் நிறைய நடைபெற வேண்டும். அதற்க்கு என்னுடைய வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.

   இந்நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தின் துணைவேந்தர் முத்தமிழ்செல்வன், எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் அறிவியல் மற்றும் மனிதநேயம், சட்டம் மற்றும் மேலாண்மை பள்ளி இணைதுணைவேந்தர் .வினய்குமார் மற்றும் கூடுதல் பதிவாளர் மைதிலி, தேர்வு கட்டுப்பாட்டாளர் குணசேகரன் மற்றும் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் ENT துறை தலைவர் பேராசிரியர் மேஜர் எஸ்.பிரசன்னகுமார் மற்றும் பேராசிரியர் ஜெ.சிவபிரியா, செயற்குழு உறுப்பினர் தியாகராஜன் உடன் கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்ச்சியில் மருத்துவம், ஆராய்ச்சி துறை சார்ந்த மாணவர்களும், பேராசிரியர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.

• பெ.தெ.லீ கல்லூரியில் இயந்திரவியல் துறை கருத்தரங்கம்.