கோவிலுக்கு சென்றவர்களை கோட்டையில் வைத்து பூட்டிய தொல்லியல் துறை அதிகாரி
· வேலூர் சித்ரா பௌர்ணமி கோவிலுக்கு சென்ற சுமார் 750- க்கும் மேற்பட்டோரை கோட்டையில் வைத்து பூட்டிய தொல்லியல் துறை அதிகாரி – காவல் துறையில் புகார் . · கோவில் வழிபாட்டை தடுக்க முயற்சி பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்த இந்து அமைப்புகள் முடிவு. வேலூர் மாவட்டம் , வேலூர் கோட்டையில் ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கு சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் கோவிலில் சுவாமி வழிபாடு நடத்தினர். இந்த நிலையில் இந்த கோட்டை தொல்லியல் துறையின் கட்டுபாட்டில் உள்ளதால் எந்தவித முன் அறிவிப்புமில்லாமல் கோவில் உள்ளே பக்தர்கள் சுமார் 750- க்கும் மேற்பட்டோரை உள்ளே வைத்து கோட்டையின் கேட்டை இழுத்து மூடி பூட்டு போட்டு விட்டனர். கோட்டையின் உள்ளே இருந்த பக்தர்கள் வெளியில் செல்ல வேண்டுமென கேட்டும் அவர்களை வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை. மேலும் கோட்டையின் உள்ளேயும் யாரையும் அனுமதிக்கவில்லை. இதனால் பக்தர்கள் காவல் துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த இந்து