Posts

Showing posts from October, 2024

• சுதந்திர இந்தியாவின் சிற்பி சர்தார்வல்லபாய்பட்டேல் பிறந்த தினம்.

Image
·          சுதந்திர இந்தியாவின் சிற்பி சர்தார்வல்லபாய்பட்டேல் பிறந்த தினம் - தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழி.       வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சுதந்திர இந்தியாவின் சிற்பி சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்த தினம் நாளை முன்னிட்டு தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழி மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலட்சுமி தலைமையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் திரளான அரசு அலுவலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டு உறுதி மொழியை எடுத்தனர்.      

Wish you Happy Diwali -T.R.Murali, District Secretary, AIADMK, Vellore Urban District.

Image
Wish you Happy Diwali to you and All your Family Members.   -T.R.Murali, District Secretary, AIADMK, Vellore Urban District.  

‘ஹார்வர்டு நாட்கள்’புத்தகம் - சிறப்பு பார்வை.

Image
  ·          இரா . செல்வம் , ஐஏஎஸ் எழுதிய ‘ ஹார்வர்டு நாட்கள் ’ புத்தகம் - காவல் துறை தலைவர் ( ஓய்வு ) எம் . எஸ் . முத்துசாமி , ஐபிஎஸ் - சிறப்பு பார்வை .    வணக்கம் .     இரா . செல்வம் , ஐஏஎஸ் எழுதிய ‘ ஹார்வர்டு நாட்கள் ’ என்னும் புத்தகத்தின் வெளியீட்டு விழா எழும்பூர் அரசு அருங்காட்சியகம் கலையரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது .         167 பக்கங்கள்கொண்ட இப்புத்தகம் , நியூ செஞ்சுரி புக் ஹவுஸின் பதிப்பாகும் . விலை 200 ரூபாய் .           ‘ யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் ’ என்ற உயர்ந்த நோக்கத்தில் எழுதப்பட்ட புத்தகங்களுள் இதுவும் ஒன்று . மிகவும் எளிமையான நடையில் , ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் , ஆங்காங்கே புள்ளி விவரங்களுடன் எழுதப்பட்ட , மிகவும் சுவராஸ்யமான புத்தகம் இது .       கண்ணாடி இல்லாமல் படிக்கக் கூடிய எழுத்துரு அளவு (font size), எளிமையாகப் புரியும் விதத்தில் சின்னச் சின்ன பத்திகள் (paragraphing), தேவைப்படும் இடங்களில் படங்கள் (photos), கூறியது கூறல் இல்லாமை , நேர்த்தியான அட்டை வடிவமைப்பு என இப்புத்தகத்திற்கு பல

• ஆற்காடு மகாலட்சுமி குளோபல் பள்ளியில் விபத்தில்லாத தீபாவளி.

Image
·          விபத்து இல்லா தீபாவளி எப்படி கொண்டாடுவது ?      ஆற்காடு தீயணைப்பு துறை சார்பில் மகாலட்சுமி குளோபல் பள்ளியில் விபத்தில்லாத தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி .                 ஆற்காடு மகாலட்சுமி குளோபல் பள்ளி யில் ஆற்காடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இணைந்து விபத்து இல்லா தீபாவளி பண்டிகை பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது .            இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீ லட்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளை தலைவர் Rtn.PHF. பாலாஜி லோகநாதன் சிறப்பு விருந்தினர்களை கௌரவித்து அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார் .             இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஆற்காடு தீயணைப்பு துறை நிலைய அலுவலர் பரிமளா கலந்து கொண்டு மாணவ , மாணவியர்களுக்கு விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவது எப்படி என்றும் பட்டாசு வெடிக்கும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளையும் தெளிவாக மாணவர்களுக்கு தீயனைப்பு துறை உதவியாளர்கள் மூலம் விளக்கினார் .       இந்நிகழ்ச்சியில் ஆற்காடு தீயணைப்பு துறை அதிகாரிகள் , பள்ளி முதல்வர் தண்டபானி , ஆசிரியர்கள்

• JCI வெற்றி வீரன் மண்டல மாநாடு.

Image
·          JCI வெற்றி வீரன் மண்டல மாநாடு - ஆற்காடு மகாலட்சுமி நர்சிங் கல்லூரி மாணவியர் முதலிடம். ·          ஸ்ரீ லட்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளை சேர்மன் Rtn.PHF. பாலாஜி லோகநாதன் வாழ்த்து.          JCI மண்டலம் 16 சார்பில் 50 கிளை கொண்ட இயக்கம் செயல்பட்டு வருகிறது . அதில் ஆற்காடு மகாலட்சுமி நர்சிங் கல்லூரி இளைய ஜேசிக்களும் உள்ளனர் . இதில் ஆற்காடு மகாலட்சுமி நர்சிங் கல்லூரி மாணவியர்கள் சிறப்பாக செயல்பட்டமையை பாராட்டி காட்பாடி குடியாத்தம் சாலையில் உள்ள துர்கா மகாலில் நடைபெற்ற வெற்றி வீரன் மண்டல மாநாட்டில் JCI Zone 16 மண்டல தலைவர் JFM. ஏழுமலை, ஆற்காடு மகாலட்சுமி நர்சிங் கல்லூரி இளைய JCI மாணவிகளுக்கு முதலிடம் கோப்பையை வழங்கினார் .            ஸ்ரீ லட்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளை சேர்மன் Rtn.PHF. பாலாஜி லோகநாதன் மகாலட்சுமி நர்சிங் கல்லூரி இளைய ஜேசிக்களை நர்சிங் சேவை செய்வது மட்டுமல்லாமல் JCI சார்பிலும் சிறந்த இளைய ஜேசிக்களாக முதலிடம் பிடித்தமைக்கு பாராட்டி வாழ்த்து தெரிவித்தார் . உடன் ஆற்காடு கிச்சிலி கிளை

• வேலூர் மாவட்டத்தில் விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளி.

·         வேலூர் மாவட்டத்தில் விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு    மாவட்ட ஆட்சித் தலைவர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் . தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும்.   இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதே வேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்ட வை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால்   எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறு குழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.   பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரி மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கில் மாண்புமிகு உச்ச நீதிமன்றம் தனது 23.10.2018 - ஆம் நாளிட்ட ஆணையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும் எனவும், வருங்காலத்தில் பசுமைப் பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் எனவும் நிபந்தனைகளை விதித