Posts

Showing posts from July, 2024

• வேலூரில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆர்பாட்டம்.

Image
  ·         வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கட்டுமானம்   மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆர்பாட்டம்.       வேலூர் மாவட்டம் , வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் கூட்டமைப்பின் தலைவர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.       இந்த ஆர்ப்பாட்டத்தினை தமிழ்நாடு அமைப்புசாரா ஆட்டோ தொழிலாளர் நலவாரியத்தின் உறுப்பினர் ஆர்.டி . பழனி துவங்கி வைத்தார்.              தற்போது கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வழங்கி வரும் ஓய்வூதியம் ரூ .1200-5000/- ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.       நலவாரியத்தில் பதிவு பெற்றவர்கள் 60 வயதிற்கு மேல் இருந்தாலும் இயற்கை மரண உதவி தொகையை அவர்களின் குடும்பத்திற்கு வழங்க வேண்டும். நலவாரியத்திற்கு என தனி வங்கியை துவங்கி அதன் மூலம் பண பலன்களை தொழிலாளர்களுக்கு வழங்கவும், பணப்பயன் பெறும் அனைத்து தொழிலாளர்களுக்கும் நலவாரியம் மூலம் குறுஞ்செய்திகளை அவர்களுக்கு அனுப்ப வேண்டும். மேலும

• வேலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 01.08.2024 மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்.

·         வேலூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் வருகின்ற 01.08.2024 அன்று வேலூர்   ஊராட்சி ஒன்றியத்தில்   நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சித் தலைவர் .                 வேலூர் மாவட்டத்தில்   ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்வர்   திட்ட முகாம் 11.07.2024 முதல் நடைபெற்று வருகிறது. இந்த முகாம் 14.08.2024 வரை நடைபெறவுள்ளது. இந்த   மக்களுடன் முதல்வர் முகாம்களில் பொதுமக்களுக்கு   15 துறைகளிலிருந்து 44 சேவைகள் வழங்கப்படவுள்ளது.   அதன்படி 01.08.2024 வியாக்கிழமை அன்று வேலூர் ஊராட்சி ஒன்றியத்தில்   பாலமதி ஊராட்சியை சார்ந்த பொதுமக்களுக்கு   பாலமதி கிராமத்தில் குழந்தை வேலாயுதர் மகாலில் ஊரக பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறவுள்ளது.                            எனவே வேலூர் மாவட்டத்தில்   ஊரக பகுதிகளில்   ‘01.08.2024 அன்று வேலூர் ஊராட்சி ஒன்றியத்தில்   நடைபெறவுள்ள மக்களுடன் முதல்வர் முகாமில்   பொதுமக்கள் 15 துறைகளை சார்ந்த   தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக அளித்து தீர்வுகாணுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி, தெரிவித்துள்ளார்.

• வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை கடத்தல்.

Image
  ·         வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் மூன்று   நாட்களுக்கு முன்பாக பிறந்த ஆண் குழந்தை கடத்தல்.        வேலூர் மாவட்டம் , வேலூர் அடுக்கம்பாறையிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பேர்ணாம்பட்டு அரவட்லா மலை கிராமத்தை சார்ந்த சின்னி ( வயது 20 ) கணவர் பெயர் கோவிந்தன் என்பவர் சென்ற 27- ஆம் தேதி இரவு பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார் . அன்று இரவே சுமார் 1½   மணியளவில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது . 28- ஆம் தேதி காலை பிரசவ வார்டிற்கு மாற்றப்பட்டு   சிகிச்சையில் இருந்தார் .              இன்று காலை சுமார் 8 மணி அளவில் பெண் ஒருவர் குழந்தையின் பாட்டியிடம் உணவு பொட்டலத்தை கொடுத்து சாப்பிட    சொல்லிவிட்டு அக்குழந்தையை தூக்கிச் சென்றுள்ளார். பட்டப் பகலில் மக்கள் நடமாட்டமுள்ள நேரத்தில் பிறந்து மூன்று நாட்களே ஆன ஆண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .     இதுகுறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர வி

• வேலூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம்.

Image
  ·         வேலூரில் மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழகத்திற்கு போதுமான நிதியை ஒதுக்காத பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம்.      வேலூர், அண்ணாகலையரங்கம் அருகில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்டத் தலைவர் டீக்காராமன் தலைமையில் மத்திய பட்ஜெட்டில் பாஜக அரசு தமிழகத்திற்கும் மற்ற இந்தியா கூட்டணி மாநிலங்களுக்கும் போதுமான நிதியை ஒதுக்கவில்லை.      இதனை கண்டித்தும் தமிழகத்திற்கு போதுமான நிதியை ஒதுக்கீடு செய்ய கோரி மத்திய அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதில் சிறுபான்மை பிரிவு தலைவர் வாகீத்பாஷா மற்றும் எஸ்.சி . எஸ்டி துறை மாநில செயலாளர் சித்தரஞ்சன் உள்ளிட்ட திரளான காங்கிரஸ் கட்சியினர் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.  

• வேலூர் மாவட்டத்தில் 36,042 மாணவ, மாணவிகள் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் பயன்.

·          வேலூர்   மாவட்டத்தில் 707 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 36,042 மாணவ , மாணவிகள் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் பயனடைந்து வருவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார் . நகரப் பகுதிகளிலும் , கிராமப் பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுவதால் பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை . பள்ளிகள் தூரமாக இருப்பது மட்டுமல்ல , சிலருடைய குடும்ப சூழலும் இதற்கு காரணமாக இருக்கிறது .   இதனை மனதில் கொண்டு , அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதற்கட்டமாக மாநகராட்சி , நகராட்சிகளிலும் , தொலைதூரக் கிராமங்களிலும் இத்திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கிவைத்தார் . 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 07.05.2022 அன்று