Posts

Showing posts from November, 2024

• குடியாத்தம் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்.

Image
  ·          குடியாத்தம் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம்.       வேலூர் மாவட்டம், குடியாத்தம், அரசினர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது . இந்த சிறப்பு முகாமினை வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே . இரா . சுப்புலெட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  

• ”மத்திய அரசு கல்வி நிறுவனங்களான IIT, IIM, IIIT, NIT கல்வி உதவித் தொகை.

·         ” மத்திய அரசு கல்வி நிறுவனங்களான IIT, IIM, IIIT, NIT மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் , மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன (BC/MBC/DNC) மாணவ , மாணவிகள் 2024-2025- ம் கல்வி ஆண்டிற்கான புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித் தொகை க்கு (Fresh and Renewal Applications) தகுதியான மாணாக்கர்கள் விண்ணப்பி த்து பயன்பெறுமாறு வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.                  தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான IIT, IIM, IIIT, NIT மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் (Central Universities) பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் , மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை (BC/MBC/DNC) சார்ந்த மாணவ / மாணவியர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ .2.50 இலட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணாக்கர் ஒருவருக்கு கல்வி உதவித் தொகையாக கற்ப்பிப்பு கட்டணம் , சி

• வேலூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்.

Image
வேலூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்ட ம் -   மாவட்ட ஆட்சித் தலைவர் பொதுமக்களிடம் 519   கோரிக்கை மனுக்களை பெற்றார்.                 வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, தலைமையில்   நடைபெற்றது . மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய்த் துறை நிலப்பட்டா , பட்டா மாறுதல் , இலவச வீட்டு மனைப்பட்டா , முதியோர் உதவித் தொகை வேளாண்மைத் துறை , காவல் துறை . ஊரக வளார்ச்சித் துறை , நகராட்சி நிர்வாகங்கள் , பேரூராட்சித் துறை , கூட்டுறவு கடனுதவி , தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சர்பாக வீடுகள் வேண்டி , மின்சாரத் துறை சார்பான குறைகள் , மாற்றுத் திறனாளிகள் நலத் துறை . மருத்துவத் துறை , கிராம பொதுப் பிரச்சனைகள் , குடிநீர் வசதி , வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 519 மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடமிருந்து பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விச