Posts

Showing posts from December, 2023

• நல்லவைகள் பேசுங்கள் அல்லவைகள் பேசாதீர்கள்

Image
  ·          நல்லவைகள் பேசுங்கள் அல்லவைகள் பேசாதீர்கள் – 65 -வது மடாதிபதி விஸ்வகர்ம ஜெகத்குரு சிவராஜ ஞானாச்சரிய சுவாமிகள் புத்தாண்டு அருளுரை.       விஸ்வகர்ம நண்பர்கள் நலச்சங்கத்தின்   சிறப்பு பொதுக்குழு கூட்டமும் 2024- ஆம் ஆண்டிற்கான நாட்காட்டி வெளியீட்டு விழா இன்று வேலூர் காந்தி ரோடு , கே . வி . எஸ் . செட்டித் தெருவில் அமைந்துள்ள ஶ்ரீவீரபிரம்மங்கார் மடத்தில் நடைபெற்றது.       இவ்விழாவிற்கு சங்கத்தின் தலைவர் சி . தேஜோமூர்த்தி தலைமை தாங்கினார் . ஒருங்கிணைப்பாளர் ஞான . நடராஜன் தொகுப்புரையாற்றினார் . பொருளாளர் ஜெ . மணிஎழிலன் வரவேற்று பேசினார் . நிறுவனர் மற்றும் செயலாளர் செ . நா . ஜனார்த்தனன் சங்க செயல்பாடுகள் குறித்து பேசினார் .     துணைதலைவர்கள் எல் . பன்னீர்செல்வம் , எம் . ஞானசம்பந்தம், துணைசெயலாளர் கோ . சுவாமிநாதன் , விஸ்வமலர் குழு தலைவர் ம . அன்பரசு ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர் . புதிய வருட நாட்காட்டி வெளியீடு:             சங்கத்தின் மாதாந்திர நாட்காட்டியினை வெளியிட்டு சீனந்தல் மடத்தின் 65 -வது மடாதிபதி வி

• காட்பாடி வாசகர் வட்டம் சார்பில் புத்தகக் கண்காட்சி

Image
  ·          காட்பாடி வாசகர் வட்டம் சார்பில் புத்தகக் கண்காட்சி - துணை மேயர் சுனில்குமார் துவக்கி வைத்தார்.       தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், பாரதி புத்தகாலயம், மின் சிறகுகள் கலைக்குழு மற்றும் காட்பாடி வாசகர் வட்டம் இணைந்து புத்தக கண்காட்சியை நடத்தினர்.       இந்த புத்தக கண்காட்சிக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் நேதாஜி தலைமை தாங்கினார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க காட்பாடி செயலாளர் லோ நவீன் வரவேற்று பேசினார். ஜெகன், சங்கர், துர்கா, சுடரொளியன், லலிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகராட்சியின் துணைமேயர் எம்.சுனில்குமார் புத்தக கண்காட்சியினை துவக்கி வைத்து பேசினார்.       தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.சுரேந்திரன், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநில தலைவர் முனைவர் செ . நா . ஜனார்த்தனன், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் திரு . தர்மன், தமிழ்ந

• வேலூரில் தேசிய அளவிலான சப்-ஜூனியர் சாப்ட் டென்னீஸ் போட்டிகள்

Image
  ·          வேலூரில் தேசிய அளவிலான சப் - ஜூனியர் சாப்ட் டென்னீஸ் போட்டிகள் - தமிழக அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.       வேலூர் மாவட்டம் , காட்பாடியில் உள்ள வேலூர் தொழில்நுட்ப பல்கலை கழகத்தில் சாப்ட் டென்னீஸ் சங்கம் சார்பில் அகில இந்திய அளவிலான சாப்ட்   டென்னீஸ் 17- வது சப்-ஜூனியர் போட்டிகள் கடந்த 26- ஆம் தேதி துவங்கியது. இப்போட்டிகள் 30- ஆம் தேதி வரையில் ஐந்து நாட்கள் நடைபெற்றது.       இதில் இந்தியா முழுவதும் இருந்து 26 மாநிலங்களை சேர்ந்த 700- க்கும் மேற்பட்ட மாணவ , மாணவிகள் பங்கேற்று விளையாடினார்கள். இதில் இரட்டையர் ஆண்கள் போட்டியில் மத்திய பிரதேசை சேர்ந்த நிப்பிலியும் , பெண்கள் பிரிவில் தமிழ்நாட்டை சேர்ந்த நிஷாலினி இரட்டையர்கள் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றனர்.       இதேபோன்று கலப்பு   இன போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த ரிஷ்வந்த் , நிஷாலினி தங்கப்பதக்கத்தையும், இரண்டாம் பரிசு குஜராத்தை சேர்ந்த ஜெய்பீம் பிரிவும் வென்றது.       ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை ஓவர் ஆல் பட்டம் தமிழ்

• இராணிப்பேட்டை காவல் துறை சார்பில் புத்தாண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள்.

Image

• ரூ.3.8 கோடி மதிப்பில் களவு போன நகைகள், செல்போன்கள், இரு சக்கர வாகனங்கள், கார்கள், ஆட்டோக்கள் - உரியவர்களிடம் DIG முத்துசாமி ஒப்படைத்தார்

Image
·          வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் களவு போன நகைகள். செல்போன்கள். இரு சக்கர வாகனங்கள், கார்கள், ஆட்டோக்கள் பறிமுதல் செய்த ரூ . 3.8 கோடி மதிப்பிலான பொருட்கள் வேலூர் சரக காவல் துறை துணைதலைவர் முத்துசாமி உரியவர்களிடம் ஒப்படைத்தார்.                  வேலூர் மாவட்டம் , வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பகுதிகளில் களவு போன நகைகள், செல்போன்கள், 150 கார்கள், ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்கள் ஆகியவைகள் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் விழா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.            இந்த நிகழ்ச்சியில் வேலூர் சரக காவல் துறை துணைதலைவர் முத்துசாமி ரூ .3. 8 கோடி மதிப்பில் மீட்கப்பட்ட பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.                   பின்னர் காட்பாடி கிறிஸ்டியான்பேட்டையில் காவல் துறை சோதனை சாவடியையும் டி . ஐஜி முத்துசாமி திற

67-ஆவது தேசிய அளவிலான சதுரங்க போட்டி

Image
  ·         பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற 67-ஆவது தேசிய அளவிலான சதுரங்க போட்டி. ·         வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கோப்பைகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.              பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் வேலூர் மாவட்டம், ஸ்ரீபுரம் நாராயணி மஹாலில் நடைபெற்ற 67-வது தேசிய சதுரங்க போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பெ.குமாரவேல்பாண்டியன், இன்று (30.12.2023) கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் வேலூர் மாவட்டம், ஸ்ரீபுரம், நாராயணி மஹாலில் 67-வது தேசிய அளவிலான சதுரங்கப் போட்டிகள் 26.12.2023 அன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.   இப்போட்டிகளில் நாடு முழுவதும் உள்ள 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 421 மாணவர்கள் மற்றும் 402 மாணவிகள் பங்கு பெற்று போட்டிகளில் கலந்து கொண்டனர். இப்போட்டிகள் 14 வயதிற்கு உட்பட்டோர்,   17 வயதிற்கு உட்பட்டோர் மற்றும் 19 வயதிற்கு உட்பட்டோர் என மூன்று பிரிவுகளில்   நடைபெற்றது. ஒவ்வொரு பிரிவிலும் ஆண்களுக்கு தனியாகவும் பெண்களுக்கு

• காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்தின் மேலாண்மைக்குழு கூட்டம்

Image
  ·          காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்தின் மேலாண்மைக்குழு கூட்டம் - மாதாந்திர நாட்காட்டியினை கோட்டாட்சியர் ஆர் . கே . கவிதா, மாவட்ட வருவாய் அலுவலர் த . மாலதி ஆகியோர் வெளியிட்டார்கள் .       வேலூர் மாவட்டம், காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின்   மேலாண்மைக்குழு கூட்டம் மற்றும்   சங்கத்தின் 2024- ஆம் ஆண்டிற்கான மாதாந்திர நாள்காட்டி வெளியீட்டு விழா சங்கத்தின் தலைவரும் வேலூர்   வருவாய் கோட்டாட்சியர் ஆர் . கே . கவிதா தலைமையில் நடைபெற்றது .      முன்னதாக அவைத்தலைவர் செ . நா . ஜனார்த்தனன் வரவேற்று பேசினார் .            அவை துணைத்தலைவர் ஆர் . விஜயகுமாரி , இரா . சீனிவாசன் , பொருளார் வி . பழனி , ருக்ஜி . ராஜேஸ்குமார் , மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் டாக்டர் வீ . தீனபந்து , ஆர் . ராதாகிருஷ்ணன் , ஜி . செல்வம் , எஸ் . ரமேஷ்குமார்ஜெயின் , கே . அந்தோனி பாஸ்கரன், தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநில தலைவர் அ . சேகர் , வருவாய் துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் எம் . எஸ் . தீனதயாளன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர் .       ப

• வேலூர் மாவட்டத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் –II ன் கீழ் 2021 -23 ரூ.47.26 கோடி மதிப்பில் 721 பணிகள்

Image
  வேலூர் மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் –II ன் கீழ் 2021 -23   இரண்டு நிதி ஆண்டுகளில் ரூ.47.26 கோடி மதிப்பில் 721   பணிகள்.                   அனைத்து கிராம ஊராட்சிகளும் முழுமையான வளர்ச்சியை அடையும் நோக்கத்தில் முக்கியத்துவம் வாய்ந்த   அனைத்து கிராம   அண்ணா மறுமலர்ச்சி   திட்டமானது மாநில அரசால் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஐந்து ஆண்டுகளில் அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதே ஆகும்.                  அனைத்து குக்கிராமங்களும் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியினை முழுமையாக அடைவதை உறுதி செய்யும் பொருட்டு, தற்போது அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் –II   அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் 2021-2022 ம் ஆண்டு முதல் 2025-2026 ம் ஆண்டு முடிய ஐந்து ஆண்டுகளில் அனைத்து கிராமங்களிலும் படிப்படியாக நிறைவேற்றப்படும். அனைத்து குக்கிராமங்களில் வாழும் மக்களுக்கு தேவைப்படும் முக்கிய உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்யும் பொருட்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்