• நல்லவைகள் பேசுங்கள் அல்லவைகள் பேசாதீர்கள்
விஸ்வகர்ம நண்பர்கள் நலச்சங்கத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டமும் 2024-ஆம் ஆண்டிற்கான நாட்காட்டி வெளியீட்டு விழா இன்று வேலூர் காந்தி ரோடு, கே.வி.எஸ். செட்டித் தெருவில் அமைந்துள்ள ஶ்ரீவீரபிரம்மங்கார் மடத்தில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு சங்கத்தின் தலைவர் சி.தேஜோமூர்த்தி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் ஞான.நடராஜன் தொகுப்புரையாற்றினார். பொருளாளர் ஜெ.மணிஎழிலன் வரவேற்று பேசினார். நிறுவனர் மற்றும் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் சங்க செயல்பாடுகள் குறித்து பேசினார். துணைதலைவர்கள் எல்.பன்னீர்செல்வம், எம்.ஞானசம்பந்தம், துணைசெயலாளர் கோ.சுவாமிநாதன், விஸ்வமலர் குழு தலைவர் ம.அன்பரசு ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
புதிய வருட நாட்காட்டி வெளியீடு:
சங்கத்தின் மாதாந்திர நாட்காட்டியினை வெளியிட்டு சீனந்தல் மடத்தின் 65-வது மடாதிபதி விஸ்வகர்ம ஜெகத்குரு சிவராஜ ஞானாச்சரிய சுவாமிகள் அருளுரை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது.
நாட்காட்டி என்பது ஒரு நாளின் நட்சத்திரம், திதி, வாரம், யோகம், கரணம் உள்ளிட்ட ஐந்து விவரங்களை கணித்து தருவது பஞ்சாங்கம் எந்த நேரத்தில் சுப நிகழ்வுகள் செய்ய வேண்டும் என அறிந்து கொள்வதற்காக தமிழ் நாட்காட்டிகள் கணிக்கப்பட்டன. ஆங்கில மாதம், வருடம், நாள் ஆகியவற்றை கணக்கிட்டு நாட்காட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்த புத்தாண்டு தினத்தில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். அதே நேரத்தில் நல்லவைகள் பேசுங்கள், அல்லவைகள் பேசாதீர்கள் என்றார். நல்ல சொற்கள் இருக்கும்போது ஏன் அல்லாத சொற்களை பேச வேண்டும். நாம் அனைவரும் மகிழ்வுடன் வாழ நற்சிந்தனைகள் பெருக வேண்டும் என்றார். 2024-ஆம் ஆண்டிற்கான நாட்காட்டியினை வெளியிட விஸ்வகர்ம கைவினை சங்க வேலூர் மாவட்ட தலைவர் விசுவநாதன், மாநில துணைதலைவர் எம்.பிச்சாண்டி ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள்.
வாழ்த்துரை:
செயற்குழு உறுப்பினர்கள் எம்.சீனிவாசன், எஸ்.தேவராஜன், ஜெயபிரகாஷ், எஸ்.ஜெகதீசன் உள்பட பலர் பங்கேற்று பேசினர்.
முடிவில் ஒருங்கிணைப்பாளர் நடராஜன் நன்றி கூறினார்.
Comments
Post a Comment