• ரூ.3.8 கோடி மதிப்பில் களவு போன நகைகள், செல்போன்கள், இரு சக்கர வாகனங்கள், கார்கள், ஆட்டோக்கள் - உரியவர்களிடம் DIG முத்துசாமி ஒப்படைத்தார்
· வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் களவு போன நகைகள். செல்போன்கள். இரு சக்கர வாகனங்கள், கார்கள், ஆட்டோக்கள் பறிமுதல் செய்த ரூ.3.8 கோடி மதிப்பிலான பொருட்கள் வேலூர் சரக காவல் துறை துணைதலைவர் முத்துசாமி உரியவர்களிடம் ஒப்படைத்தார்.
வேலூர் மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பகுதிகளில் களவு போன நகைகள், செல்போன்கள், 150 கார்கள், ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்கள் ஆகியவைகள் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் விழா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் வேலூர் சரக காவல் துறை துணைதலைவர் முத்துசாமி ரூ.3. 8 கோடி மதிப்பில் மீட்கப்பட்ட பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.
பின்னர் காட்பாடி கிறிஸ்டியான்பேட்டையில் காவல் துறை சோதனை சாவடியையும் டி.ஐஜி முத்துசாமி திறந்து வைத்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
பேட்டி: முத்துசாமி (வேலூர் சரக காவல்துறை துணை தலைவர்)
Comments
Post a Comment