Posts

Showing posts from August, 2024

• வேலூர் ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க மானியத்துடன் கடனுதவி.

·          வேலூர் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் , மிக பிற்படுத்தப்பட்டோர் , சிறுபான்மையினர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சார்ந்த வகுப்பினர்களின் பொருளாதாரத்தை முன்னேற்றும் விதமாக ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க மானியத்துடன் வழங்கப்படும் கடனுதவி பெற தகுதியுள்ள நபர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் வே . இரா . சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார் .                    வேலூர் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் , மிகப்பிற்படுத்தப்பட்டோர் , சிறுபான்மையினர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சார்ந்த வகுப்பினர்களின் பொருளாதாரத்தை முன்னேற்றும் விதமாக ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க தமிழக அரசு நிதி உதவியுடன் புதுமையான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது . ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைப்பதற்கு தேவையான இயந்திரங்கள் , மூலப்பொருட்கள் மற்றும் பிற முன் நிகழ்வுகளுக்கு தேவையான நிதியில் ரூ ....

• வேலூர் மாவட்டத்தில் நவீன சலவையகம் அமைக்க மானியத்துடன் கடனுதவி.

·          வேலூர் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் ,   மிகப்பிற்படுத்தப்பட்டோர் , சிறுபான்மையினர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சார்ந்த வகுப்பினர்களின் பொருளாதாரத்தை முன்னேற்றும் விதமாக நவீன சலவையகம் அமைக்க மானியத்துடன் வழங்கப்படும் கடனுதவி பெற தகுதியுள்ள நபர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார் .                  வேலூர் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் , மிக பிற்படுத்தப்பட்டோர் , சிறுபான்மையினர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சார்ந்த வகுப்பினர்களின் பொருளாதாரத்தை முன்னேற்றும் விதமாக நவீன சலவையகம் அமைக்க தமிழக அரசு நிதி உதவியுடன் புதுமையான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது . நவீன சலவையகம் அமைப்பதற்கு தேவையான இயந்திரங்கள் , மூலப்பொருட்கள் மற்றும் பிற முன் நிகழ்வுகளுக்கு தேவையான நிதியில் ரூ .3.00 லட்சம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது . இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க ...

• வேலூர் மாவட்ட மழை பொழிவு விவரம்.

Image

• வேலூரில் கண் தான விழிப்புணர்வு.

Image
  ·          வேலூரில் கண் தான விழிப்புணர்வு - கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்.                 வேலூர் மாவட்டம் , வேலூரில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் ஊரீசு கல்லூரி இணைந்து தேசிய கண் தான தினத்தை முன்னிட்டு கண் தான விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கண் தானத்தின் அவசியம் குறித்த கூட்டமும் பேராசிரியர் திருமாறன் தலைமையில் நடைபெற்றது.       இதில் எம்பெருமாள் கோபிநாத் , டாக்டர் ஐசக் அபிரகாம்ராய் , மற்றும் தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் கல்லூரி மாணவ , மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி விழிப்புணர்வு ஊர்வலம் துவங்கி நகரின் முக்கிய வீதிகளான அண்ணாசாலை , ஆரணி சாலையின் வழியாக மீண்டும் ஊரீசு கல்லூரியை அடைந்தது.       இதில் எல்லா வயதினரும் கண் தானம் அளிக்கலாம். இதன் மூலம் பார்வையற்றோர் எண்ணிக்கை குறைய...

• கொணவட்டம் தேவி நகரில் நீர் நிலை ஆக்கிரமிப்பு வீடுகளில் வசிக்கும் மக்கள் மாற்று இடம்.

Image
  ·          கொணவட்டம் தேவி நகரில் நீர் நிலை ஆக்கிரமிப்பு உள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் மாற்று இடம் - அரசே வீடு கட்டி கொடுக்க    வேண்டும் - மாவட்ட ஆட்சியரிடம் மனு.       வேலூர் மாவட்டம் , கொணவட்டம் அடுத்த தேவி நகரில் மக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். அதில்   சுமார் 80 ஆண்டுகளாக 42 குடும்பங்கள் வீடு கட்டி வசித்து வருகிறோம். இதற்கு வீட்டு வரி, மின் இணைப்பு, குழாய்கள் இணைப்பும் உள்ளது.       இங்கு வசிக்கும் பொதுமக்கள் நாங்கள் அனைவரும் தினசரி கூலி வேலை, பீடி வேலை , சுமை தூக்கும்தொ ழில் செய்தும் பிழைப்பை நடத்தி வருகிறோம். தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியும், நகரத்திற்கு மிக அருகிலும் இத்தனை ஆண்டு கா லம் நாங்கள் வசித்து வந்ததால், தற்போ து இப்பகுதியை பொ துப்பணி   துறையின் நீர்வளத் துறை பிரிவினர், இது ஆக்கிரமிப்பு என கூறி இவைகளை அகற்ற உள்ளதாக எங்களுக்கு தெரிய வந்துள்ளது.     ...

• பள்ளிகொண்டா அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு.

Image
  ·         அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம், பள்ளிகொண்டா அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு. வேலூர் மாவட்டம், அணைகட்டு ஊராட்சி ஒன்றியம், பள்ளிகொண்டா அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி, இன்று (27.08.2024) திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்கு வந்திருந்த பொதுமக்களிடம் சிகிச்சை முறை மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள ஆய்வகம் மற்றும் மருந்தகங்களில் பார்வையிட்டு மருந்தகத்தில் உள்ள மருந்துகளின் இருப்பு குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து அரசு யுனானி மருத்துவ சிகிச்சை   பிரிவில் பார்வையிட்டு ஆய்வு செய்து, மருத்துவரிடம் பொதுமக்களுக்கு எந்த வகையான   நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என மருத்துவரிடம் கேட்டறிந்தார். மருத்துவர் வாதநோய், மூலநோய், தோல்நோய், ஆஸ்துமா, பக்கவாதம், சர்க்கரை, இரத்த அழுத்த நோய்கள், மாதவிடாய் மற்றும் நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சை   அளிக்கப்பட்டு வருகிறது என த...

• வேலூர் வி.ஐடி-யில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா.

Image
·          வேலூர் வி . ஐடி-யில் தமிழியக்கம் மற்றும் பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் மன்றம் இணைந்து கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா.                 வேலூர் மாவட்டம் , காட்பாடியில் உள்ள வி . ஐடி வேலூர் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தில் தமிழியக்கம் மற்றும் பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் மன்றம் இணைந்து முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா பல்கலைகழக வேந்தர் விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது.       இவ்விழாவில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கைத்தறி துறை அமைச்சர் காந்தி, நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி , நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர்.       முன்னதாக கலைஞர் கருணாநிதியின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இவ்விழாவில் கலைஞருடன் பணியாற்றியவர்களுக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது. இதில் திரளான தமிழறிஞர்களும் பொதுமக்களும் ப...

• வேலூர் மாவட்ட மழை பொழிவு விவரம்.

Image

• டிகேபுரம் பாலாற்றில் குளிக்க சென்ற இளைஞர் பாலாற்று நீரில் மூழ்கி பலி.

Image
·          டிகேபுரம் பாலாற்றில் குளிக்க சென்ற இளைஞர் பாலாற்று நீரில் மூழ்கி பலி .       வேலூர் மாவட்டம் , முள்ளிப்பாளையாம் ராமமூர்த்தி தெருவை சேர்ந்தவர் தேவி. இவரின் மகன் யுவராஜ் (21). தனியார் தோல் தொழிற்சாலையில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.       இந்த நிலையில் விடுமுறை என்பதால் யுவராஜ் சேண்பாக்கம் அடுத்த தண்டலம் கிருஷ்ணாபுரம் ( டி.கே.புரம் ) பாலாற்றில் நண்பர்களுடன் நீரில் குளிக்க சென்று குளித்து கொண்டிருந்தபோது பாலாற்றில் அதிக அளவு மணல் எடுக்கப்பட்டதால் ஏற்பட்ட பள்ளத்தில் சேற்றில் சிக்கி யுவராஜ் அங்கேயே பரிதாபமாக பலியானார். பொதுமக்கள் சேர்ந்து உடலை மீட்டனர்.       அப்போது டிகேபுரம் கிராம மக்கள் இதுவரையில் இது போன்று அதிக அளவு பாலாற்றில் மணல் எடுத்ததால் பள்ளத்தில் சிக்கி இதுவரையில் 3 பேர் பலியானதாக கூறி மணல் லாரியை சிறை பிடித்ததுடன் மேலும் யுவராஜின் உடலை கொண்டு செல்ல வந்த ஆம்புலன்சையும் சிறை ப...